வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 223
“ஆனால், சுபர்ண! நீ என்ன செய்கிறாய்? அரசனுக்கு விரோதமாகக் கசப்பான பிரசாரம் அல்லவா இது?”
“ஆச்சாரிய! இன்று உங்கள் முன்னிலையில் மட்டும் இப்படிப் பேசுகிறேன். பின்னால் ஒரு சமயம் வரும். அப்போது பரம பட்டாரகன், ராஜாதிராஜன் குமார குப்தனின் முன்னிலையிலும் சொல்லுவேன். இந்தச் சூழ்ச்சியையும் அக்கிரமத்தையும் சகித்துக்கொண்டிருப்பது, என் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால் அந்தக் காலம் ரொம்பத் தூரத்தில் இருக்கிறது. ஆச்சாரியரே! நீங்கள் அஸ்வகோஷைப் பின்பற்றி, அவர் சென்ற பாதையிலே செல்ல வேண்டும் என்பது எனது ஆசை.”
“ஆனால் குழந்தாய்! நான் ஒரு வெறும் கவிஞன். அஸ்வகோஷ் மகாத்மா. அவருக்கு இந்த உலகத்தின் சுகங்களெல்லாம் துச்சம். எனக்கோ விக்கிரமாதித்யனின் அந்தப்புரவாசிகளைப் போல அழகிகள் வேண்டும். செந்நிறத் திராட்சை மது வேண்டும்! பெரிய மாளிகை வேண்டும். எண்ணற்ற ஏவலாளர்கள் வேண்டும். இத்தனை ஆசைகளையும் வைத்துக்கொண்டு-நான் எப்படி அஸ்வகோஷாக முடியும்? ரகுவம்சத்திலே குப்தர்களை ரகுவம்சத்தினர் எனப் புகழ்ந்து பாடினேன். அதிலே மகிழ்ந்து போன விக்கிரமாதித்தியன், இந்தப் பெரிய மாளிகையையும், காஞ்சனமாலாவையும் எனக்கு அளித்தான். பதினைந்து வருடங்கள் என்னோடு வாழ்ந்த பிறகும் கூட தன்னுடைய கூந்தலிலே என்னையும் மறைத்துக் கொள்ளும் ஆற்றல் படைத்திருக்கிறாள், அந்தக் கிரேக்க அழகி, இப்போது ‘குமார சம்பவத்’ தைத் தொடங்கி இருக்கிறேன். இது என்னென்ன பரிசுகளை எனக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது பார்!”
“என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆச்சாரியரே! நீங்கள் ரகுவம்சத்தையும் குமார சம்பவத்தையும் எழுதாமல் ‘புத்த சரித’த்தையும் ‘சௌந்தரியானந்த’ த்தையும் எழுதியிருந்தால், பட்டினியால் மடிந்து போயிருப்பீர்களா? உலக சுகங்களிலிருந்து ஒதுக்கப்பட்டியிருப்பீர்களா? அரசர்களை முகஸ்துதி செய்யா விட்டால், உங்கள் வாழ்க்கை சுகமற்றதாய் இருக்குமென்று நீங்கள் கருதுவது வெறும் மயக்கம். நீங்கள் வருங்காலக் கவிஞர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டிச் செல்கிறீர்கள். எல்லோரும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 223, நீங்கள், வேண்டும், புத்தகங்கள், பக்கம், கொண்டு, கங்கை, வால்காவிலிருந்து, ஆச்சாரியரே, நான், வெறும், பெரிய, அந்தக், விஷ்ணுவின், அரசர்களை, சிறந்த, கொள்ள, “ஆனால், உங்கள், குமார