வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 224
“அந்த மாதிரிக் காவியங்களையும் எழுத முயற்சிப்பேன், சுபர்ண!”
“ஆனால், இந்தக் குப்தர்களின் பாவச் செயல்களின் மீது சவுக்கடி விழும்படி ஒன்றுகூட எழுதமாட்டீர்களா?”
“அது என்னால் முடியாது குழந்தாய்! நான் அதிக சுகவாசியாக ஆகிவிட்டேன்.”
“ஆனால் அரசர்களின் ஓவ்வொரு பாவச் செயலுக்கும் தர்மத் தரைபோட்டு மூடுவீர்கள்!”
“அப்படிச் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சி சக்தி பலப்பட மாட்டாது. வசிட்டர், விசுவாமித்திரர் போன்ற மகரிஷிகளும் அந்த மாதிரி செய்வது அவசியம் என்று கருதினார்கள்.”
“வசிட்டரும் விஸ்வாமித்திரரும் மகாகவி காளிதாஸரைப் போலவே, சுகவாழ்விற்கும் சுந்தர யுவதிகளுக்கும் ஆசைப்பட்டே, இந்தப் பாவ காரியங்களையெல்லாம் செய்திருக்கிறார்கள்.”
“அதுபோகட்டும் சுபர்ண! நீ ஏட்டுப்படிப்போடுகூட யுத்தக் கல்வியையும் பயின்றிருக்கிறாயல்லவா! நீ விரும்பினால், உன்னை ஒரு குமாரமாத்யனாகவோ அல்லது சேனாநாயகனாகவோ நியமிக்கும்படி பரமபட்டாரகரிடம் சொல்லுகிறேன். மகாராஜாவும் மகிழ்ச்சியோடு சம்மதிப்பார்.”
“நான் என்னுடைய சரீரத்தை யாருக்கும் விற்க விரும்பவில்லை, ஆச்சாரியரே!”
“நல்லது; ராஜப் புரோகிதர்களிலே ஒருவனாக ஆக விருப்பமா?”
“பிராமணர்களின் சுயநலமும் சூழ்ச்சியும் எனக்கு வெறுப்பை அளிக்கிறது.”
“அப்படியானால் நீ என்ன செய்யப் போகிறாய்?”
“இன்னும் படிக்க வேண்டியது அதிகம் இருக்கிறது.”
4
உஜ்ஜைனியில் வசித்தபொழுது, எனது அறிவுத்தாகத்தைத் தணித்துக் கொள்வதற்கு மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை; நான் ஏற்கெனவே தெரிவித்தபடி பரந்து கிடக்கும் உலகத்தைப் புரிந்துகொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பிராமணர்கள் தங்களை அரசர்களின் கையிலே முற்றிலும் விற்றுவிட்டார்கள் என்பதை நெருங்கிப்பார்க்கவும் முடிந்தது. ஒரு காலத்தில் மற்றவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும்கூட நான் என்னைப் பிராமணன் என்று நினைத்துக்கொள்வதிலும், சொல்லிக் கொள்வதிலும் பெருமைப்பட்டேன். கிராமத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்னாலேயே, எனது பிராமணப் பெருமை சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பித்துவிட்டது. நகரத்திற்கு வந்ததும் அது முற்றிலும் போய்விட்டது. இங்கு வந்த பிறகு பரூகச்சத்திலிருந்து
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 224, புத்தகங்கள், பக்கம், வால்காவிலிருந்து, நான், கங்கை, அரசர்களின், எனது, முற்றிலும், சந்தர்ப்பம், சுபர்ண, சிறந்த, மகாகவி, “ஆனால், பாவச்