வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 222
“ஆனால், குப்த வம்சத்தினர் பசுவையும், பிராமணர்களையும் காப்பாற்றுகிறார்கள்.”
“ஆச்சாரிய! முட்டாள்களுக்குச் சொல்வது போன்ற உபதேசத்தை, நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நம் முன்னோர்கள் பசுக்களைக் காப்பாற்றினார்கள்; அன்பிற்காகவல்ல-சாப்பிடுவதற்காகத்தான் என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான். உங்கள் மேக தூதத்திலே, பசுக்களைக் கொன்றதின் மூலம் சர்மண்வதி நதியைத் தோற்றுவித்த ரந்திதேவனை, நீங்கள்தானே புகழ்ந்து எழுதியிருக்கிறீர்கள்?”*
“நீ நேர்மையானவன், சுபர்ண! எனது அன்பிற்கு உரிய மாணவன்.”
“இதைத் தங்கள் வாயாராக் கேட்க மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், காலத்தை வென்றுவிட்ட கவிச் சக்கரவர்த்தி, என் குருநாதர் இந்த தர்ம
நாசகர்களான குப்த அரசர்களின் முன்னால் முழந்தாள் படியிடுவதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது.”
“நீ அவர்கள் தர்மத்தை நாசம் செய்கிறவர்கள் என்றா சொல்கிறாய்?”
“ஆம்; நிச்சயமாக, நந்தர்கள், மௌரியர்கள், கிரேக்கர்கள், சகரர்கள், மங்கோலியர்கள் யாவரும் செய்யத் துணியாத பாவத்தை, இந்தக் குப்தர்கள் செய்திருக்கிறார்கள். ஜன ஆட்சியின் பெயர்கூட, பாரத தேசத்திலே இல்லாமல் நசுக்கிவிட்டார்கள்.”
“ஜன ஆட்சி இந்தக் காலத்திற்கு ஏற்றதல்ல சுபர்ண! ஜன ஆட்சிகளை அப்படியே வைத்திருந்தால், சந்திரகுப்தனால் மங்கோலியர்களையும் மற்றவெளி எதிரிகளையும் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்க முடியாது.”
“வெற்றி யாருக்கு? தன்னுடைய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்துவதற்கு மற்றொரு சந்திரகுப்த மௌரியனாக ஆவதற்குத்தானே? ஆனால், சாணக்கியனின் ஒப்புயர்வற்ற அறிவின் பலத்திலே ஸ்தாபித்து வளர்க்கப்பட்ட அந்த மௌரிய சாம்ராஜ்யம் கூட, நீண்ட நாள் நிலைத்திருக்க முடியவில்லை. இந்த விக்கிரமாதித்யனுடைய வம்சமும் எத்தனை நாளைக்குச் சக்கரவர்த்தியாக இருக்கப் போகிறதோ யார் கண்டார்கள்? அப்படியிருக்க, இவன் ஜன ஆட்சியின் சின்னமே இல்லாமல் அழித்து விட்டான். இது என்ன தர்ம காரியத்திற்காகவோ! ஆதி காலந்தொட்டு நடந்து வரும் ஜன ஆட்சியின் நிழல் கூட இல்லாமல் செய்வது மகா பாவமில்லையா?”
“ஆனால், அரசன் திருமாலின் அம்சம்.”
“ஆம்; நாளை குமார குப்தனும் தன்னுடைய படத்தோடு சேர்த்து ஒரு மயிலின் படத்தையும் தீட்டச் செய்வான். வருங்காலச் சந்ததியார் அவனைக் குமாரக் கடவுள் என்று வணங்குவார்கள். இந்த ஏமாற்றம்-இந்தச் சூழ்ச்சி,
____________________________________________________
* வ்ய லம்போதஹூரபித நயாலம்பஜாம் மானியிஷ்யந் ஸரோதோ மூர்த்தியா புவி பரிணதாம் ரந்தி தேவஸ்ய கீர்த்திம்-மேகதூதம் 1.45.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 222, புத்தகங்கள், ஆட்சியின், பக்கம், வால்காவிலிருந்து, இல்லாமல், கங்கை, “ஆம், இந்தக், தன்னுடைய, முடியாது, பசுக்களைக், தங்கள், சிறந்த, “ஆனால், குப்த, சுபர்ண, தர்ம