வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 217
“நான் அங்குதான் பிறந்தேன். ஆனால், நான் பத்து வயதுச் சிறுவனாய் இருந்தபொழுது, என் தாய் தந்தையர் தேசத்தைவிட்டு ஓட வேண்டி நேர்ந்தது. எனக்கு இரண்டு தமையன்மார்கள் இருந்தார்கள், அவர்களின் வமிசத்தினரைத்தான் இப்பொழுது நீ இங்கே பார்க்கிறாய்.”
“தேசத்தை விட்டு ஓடவேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது, தாத்தா?”
“ஆதிகாலம் முதல் யௌதேயர்கள் தங்கள் சொந்த தேசத்திலே சுதந்திரமாக வாழ்ந்து வாழ்ந்தார்கள். பாரத நாட்டிலே தோன்றிய பெரிய பெரிய புகழ்பெற்ற அரசர்கள், மௌரிய, கிரேக்க சகர சக்கரவர்த்திகள் யாவரும் எங்கள் ஜன ஆட்சியிடமிருந்து ஒரு சிறு தொகையை கப்பமாகப் பெற்றுக் கொண்டதைத் தவிர, எங்கள் நாட்டின் ஆட்சியிலே தலையிட்டு, எவ்விதத் தொல்லையையும் விளைவிக்கவில்லை. ஆனால் இந்த குப்த வம்சம் ...... தன்னை விக்கிரமாதித்தியன் என்று அழைத்துக் கொண்டு, உஜ்ஜைனியையும் பாதி நாள் தலைநகரமாக ஆக்கியிருக்கிறானே இந்தச் சந்திரகுப்தன் -இவனுடைய குப்த வம்சம் சக்கரவர்த்தி பதவியை அடைந்ததும், யௌதேயர்களின் ஜன ஆட்சியை ஒழித்து விட்டது. வெற்றி பெற்ற சக்கரவர்த்திக்குச் சிறிது காணிக்கை செலுத்த, யௌதேயர்கள் தயாராய் இருந்தார்கள். ஆனால், குப்த அரசன் அதை ஒப்புக் கொள்ளவில்லை. மற்றப் பிரதேசத்தில் அவனது ஆட்சி நடைபெறுவதைப் போலவே இந்தப் பிரதேசத்திலும் நடப்பதற்கு ஒரு உபரிகனை (கவர்னர்)யும் சில குமார மாத்யர் (கமிஷனர்)களையும் நியமிப்போம் என்று கூறி விட்டான். எங்கள் ஜனத்தலைவர்கள் அவனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். ஆதிகாலம் தொட்டு, ஜன ஆட்சியைத் தவிர வேறுவித ஆட்சிக்கு யௌதேயர்கள் பழக்கப்படவில்லையென்றும் எடுத்துக் காட்டினார்கள். ஆனால்
வெற்றி வெறியிலே மூழ்கிக் கிடக்கும் அரசன், அதை ஏன் ஒப்புக் கொள்ளப் போகிறான்? முடிவில் வேறு வழியின்றி தங்கள் குல தெய்வத்தை வணங்கிக் கத்தி எடுத்தார்கள் யௌதேயர்கள். பல முறை அவர்கள் குப்த சேனையைப் பின்னால் தள்ளினார்கள். எங்களைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு சேனையாய் இருப்பினும், யௌதேவர்கள் போராடி வெற்றி பெற்றிருக்க கூடும். ஆனால் பிர்ம புத்ராவிலிருந்து பாலைவனப் பிரதேசம்வரை பரவிக் கிடக்கும் சாம்ராஜ்யத்தின் பெரிய சேனையை எதிர்த்து நின்று எத்தனை காலத்திற்குத் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும். ஏராளமான ஜன அழிவும் தோல்வியுந்தான் யௌதேயர்களுக்குக் கிடைத்தது. குப்தர்கள் எங்கள் நகரங்களையும் கிராமங்களையும் நாசமாக்கினர். ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்தனர். முப்பது வருடப் போராட்டத்திற்குப் பிறகு, யௌதேயர்கள் தங்கள் தேசத்தையே விட்டு ஓட நேர்ந்தது. அவர்களுடைய ஜன ஆட்சி, கொல்லப்படாமல் வாழ அனுமதித்திருந்தால், அவர்கள் எவ்வளவு அதிகமான கப்பமும் கட்டி இருப்பார்கள்.”
“அந்த ஜன ஆட்சி எப்படி இருக்கும், தாத்தா?”
“அதில் ஒவ்வொரு யௌதேயனும் தலைநிமிர்ந்து நடப்பான். யார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 217, புத்தகங்கள், யௌதேயர்கள், குப்த, எங்கள், பக்கம், தங்கள், பெரிய, வெற்றி, தாத்தா, வால்காவிலிருந்து, கங்கை, ஆட்சி, வம்சம், ஒப்புக், கிடக்கும், அரசன், விட்டு, யௌதேயர்களின், சிறந்த, தேசத்திலே, நேர்ந்தது, இருந்தார்கள், இரண்டு, தவிர