வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 206
இருவரும் கிளம்பினார்கள். நதி, நகரத்திலிருந்து சிறிது தூரத்தே இருந்தது. நிலவொளியிலே பிரகாசிக்கும் வெள்ளை மணல் மீது அவர்கள் நீண்ட தூரம் நடந்து சென்றார்கள். பிரபா தனது மிதியடியைக் கையிலே எடுத்துக் கொண்டாள். பாதங்களிலே மிதிபடும் அந்த மெல்லிய மணல் ஸ்பரிசம் அவளுக்குச் சுகமாயிருந்தது. அவள் அஸ்வகோஷின் இடுப்பைத் தன்னிரு கரங்களாலும் வளைத்துக் கொண்டு,
“அன்ப! இந்தச் சரயூவின் மெல்லிய மணல் ஸ்பரிசம் எவ்வளவு சுகம் நிறைந்ததாய் இருக்கிறது!”
“ஆம்; பாதங்களிலே இன்பக் கூச்சத்தை உண்டு பண்ணுகிறது.”
“அன்புக்குரிய சரயூ! உன்னை நினைத்தால் மகிழ்ச்சியும் மயிர்க் கூச்சமும் ஏற்படுகிறது.”
“நான் அநேக முறை நினைத்தேன். அன்பே! நாம் இங்கிருந்து எங்காவது ஓடி விடுவோம். நமது காதலைப் பார்த்துப் பொறாமை கொள்பவர்கள் இல்லாத தேசத்திற்குச் சென்று விடுவோம். நீ கருத்துக் கொடுக்க நான் கவிதை செய்து இருவரும் அந்த வீணையிலே மீட்டி, இசை பாடி வாழ்வோம். இந்த மென்மையான மணற்பரப்பிலே இன்ப நிலவு பொழியும் இரவிலே, எனது வீணையைக் கொண்டுவர முடியவில்லை. ஏன்? ஜனங்கள் வந்து கூடிவிடுவார்கள். அவர்களில் பலருடைய கண்களிலே பொறாமை பொங்கி வழியும்.”
“அன்ப! தவறாகக் கருதிக் கொள்ளாதே. நான் அடிக்கடி நினைப்ப துண்டு.
நான் இல்லாமலிருந்தால்...?”
அஸ்வகோஷ் அவளைத் தனது தோள்களிலே இறுகத் தழுவிக் கொண்டு,
“இல்லை அன்பே! ஒரு நாளுமில்லை. நாம் இருவரும் இப்படியே நிரந்தரமாய் இருப்போம்.”
“என் அன்ப! நான் சொல்வதின் கருத்து வேறு. உலகத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. இப்பொழுது நீ இல்லாமல் நான் மட்டும் தனியாக இருக்கும் நிலைமை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியும் ஏற்படலாமல்லவா?”
“ஏற்படலாம்.”
“இப்போது நீ முன் மாதிரித் துடிதுடிக்கவில்லையே, கோஷ்? ஆம்! நீ இல்லாவிடில் துயரப்பாறை முழுதும் என் தலையில்தானே விழும்? அதனால்தானே?”
“நீ என்னிடம் மிகக் கொடுமையாக நடந்து கொள்கிறாய், பிரபா!”
“பிரபா அவனுடைய இதழ்களிலே முத்தமிட்டு அவனைத் தழுவிக் கொண்டாள். அந்த மகிழ்ச்சியிலே திளைத்திருந்த அஸ்வகோஷை நோக்கி,
“வாழ்க்கை பல பகுதிகளையுடையது. எப்பொழுதும் பௌர்ணமி
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 206, நான், புத்தகங்கள், மணல், பக்கம், அந்த, இருவரும், கங்கை, வால்காவிலிருந்து, கொண்டு, “அன்ப, ஏற்படுகிறது, அன்பே, விடுவோம், ஸ்பரிசம், தழுவிக், நாம், பொறாமை, கொண்டாள், அன்ப, நிலவு, சிறந்த, சரயூவின், நடந்து, பாதங்களிலே, தனது, பிரபா, மெல்லிய