வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 195
5
அஸ்வகோஷ் நாடக மேடையிலே நடிப்பதும், ஒரு கிரேக்கப் பெண்ணைக் காதலிப்பதும் அவனுடைய தாய் தந்தையர்களுக்குத் தெரியாமல் இருக்கமுடியாது. அதைக் கேள்விப்பட்டதும், அவனுடைய தந்தை மிகவும் கவலையடைந்தார். பிராமணன், சுவர்ணாட்சியிடம் மகனுக்கு அறிவுறுத்தும் படி கூறினார். பிராமண குலத்தவர்களாகிய நமக்கு இந்தச் சம்பந்தம் தகாது என்று ‘தாய்’ மகனிடம் கூறியபொழுது, வேதங்களையும், சாஸ்திரங்களையும் கரைகண்ட ஞானி அஸ்வகோஷ் பழங்கால மகரிஷிகளின் சரித்திரங்களிலிருந்தும், சொற்களிலிருந்தும் நூற்றுக் கணக்கான உதாரணங்களைத் தாய்க்கு எடுத்துக்காட்டினான் (அவன் தாய்க்குச் சொல்லியவற்றுள் பலவற்றைச் சேர்த்து, பிற்காலத்தில் ‘வஜ்ர சேதிகா’ என்ற நூலாக்கினான். அது இன்றும் ‘வஜ்ரசேதிகோபநிஷதம்’ என்ற பெயரால் புகழ்பெற்று, உபநிஷத மாலைகளிலே சேர்க்கப்பட்டிருக்கிறது.) இதைக் கேட்ட தாய்,
“நீ சொல்வதெல்லாம் சரி மகனே! இன்றைய பிராமணர்கள் அந்தப்
பழங்காலப் பழக்க வழக்கத்தை ஒப்புக் கொள்வதில்லையே!”
“ஆனால், நான் பிராமணர்களுக்கு ஒரு புதிய நற்பழக்கத்தைச் சிருஷ்டிப்பேன்.”
அவன் சொல்லிய சமாதானங்கள் தாயைத் திருப்திப்படுத்தவில்லை. ஆனால் முடிவிலே, “பிரபாவையும் எனது உயிரையும் பிரிக்கமுடியாது” என்று மகன் சொல்லியதும் தாய் உடனே மகன் கட்சியைச் சேர்ந்து விட்டாள். “மகனே! நீதான் எனக்குச் சகலமும்” என்று கண்ணீர் பெருகக் கூறினாள்.
அஸ்வகோஷ், ஒருநாள் பிரபாவைத் தன் தாயிடம் அனுப்பி வைத்தான். அழகைப் போலவே அவளுடைய குணமும், சுபாவமும் உயர்ந்ததாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த தாய், அந்த யுவதியை மனப்பூர்வமாக ஆசீர்வதித்தாள். ஆனால், பிராமணன் இதை ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை. ஒருநாள் தன் மகனை அழைத்து, “மகனே! நாம் க்ஷத்திரியர்களை விட உயர்ந்த பிராமண குலத்தவர்கள். ஐம்பது தலை முறைகளாக, நம் வீட்டிற்கு உயர்குலப் பிராமணக் கன்னிகைகளே மாட்டுப் பெண்களாய் வந்திருக்கின்றனர். நீ இன்று இந்தச் சம்பந்தத்தை ஏற்றுக் கொண்டால், நம்முடைய எதிர்கால சந்ததியார்கள் எல்லோரும் ஜாதியிலிருந்து தள்ளப்படுவார்கள். நம்முடைய குலப்பெருமை அழிந்துவிடும்” என்று கூறினான். ஆனால் அஸ்வகோஷ் பிரபாவைப் பிரிவது
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 195, புத்தகங்கள், அவனுடைய, அஸ்வகோஷ், தாய், பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, மகன், ஒப்புக், “மகனே, நம்முடைய, அவன், ஒருநாள், பிராமண, பெரிய, நாடக, பிராமணன், சிறந்த, இந்தச்