வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 189
பெருக்கும்படி செய்துவிட்டது. அந்தச் சமயத்தில் அவனுடைய பார்வை பிரபாவின் அன்பு நிறைந்த கண்களைச் சந்தித்தது.
நாடகம் முடிந்ததும் நாடகத்திலே நடித்த யுவர்களும் யுவதிகளும் அஸ்வகோஷுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். அஸ்வகோஷ், “இந்த சாகேத நகரத்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் நான் இந்த அற்புதமான கலையைப் பற்றிச் சிறிதும் அறியாமல் இருந்திருக்கிறேன். நான் இதுவரை பார்த்திராத ஒரு ‘பிரபாலோக’ (ஜோதி உலகத்தை எனக்குக் காண்பித்தீர்கள். நண்பர்களே! நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினான்.
“பிரபாலோகம்” என்று அவன் கூறியபொழுது, யுவதிகளெல்லாம் பிரபாவைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தனர்.
“என்னுடைய மனதிலே ஓர் எண்ணம் உதிக்கிறது. நீங்கள் இன்று பிராகிருத பாஷையிலே கிரேக்க நாடகத்தை நடத்தினீர்கள். அதே தோரணையில் நாடக முறையை அனுசரித்து, நம் நாட்டுக் கதைகளைக் கொண்டு நாடகங்கள் தயாரிக்கலாம் என்று கருதுகிறேன்” என்றான் அஸ்வகோஷ்.
“கவிஞரே! நீங்கள் நினைத்தால் கிரேக்க நாடகங்களைவிடச் சிறந்த நாடகங்களைத் தயாரிக்க முடியும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.”
“அப்படிச் சொல்லாதீர்கள். கிரேக்க நாடகாசிரியர்களின் மாணவன் ஸ்தானத்தை அடையக்கூட எனக்குத் தகுதியிருக்கிறதோ என்னவோ! நல்லது. ஊர்வசி வியோகத்தையே ஒரு நாடகமாக எழுதலாமா?”
“ரொம்ப நல்லது! நாங்கள் அதை நடிக்க மகிழ்ச்சியோடு காத்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. புரூரவாவின் வேஷத்தை நீங்கள்தான் தாங்க வேண்டும்.”
“எனக்கு ஆட்சேபணை இல்லை. சிறிது பயிற்சி எடுத்துக் கொண்டால் நானும் பிழையின்றி நடிப்பேன் என்றே கருதுகிறேன்.”
“காட்சிக்கு வேண்டிய திரைகளை எழுத ஏற்பாடு செய்கிறோம்.”
“காட்சித் திரைகளிலே புரூரவாவின் தேசக்காட்சிகள் சரியாய்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 189, கிரேக்க, புத்தகங்கள், நான், அஸ்வகோஷ், அவனுடைய, வால்காவிலிருந்து, சிறந்த, பக்கம், கங்கை, மகிழ்ச்சியோடு, நல்லது, புரூரவாவின், கொண்டு, நாங்கள், நீங்கள், யுவதிகளும், பிராகிருத, நாடகம், பாஷையிலே, யுவர்களும், ஊர்வசி, அவன்