வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 179
“நாகா! நீ மனிதன் அல்ல, தேவதை-இல்லை இல்லை. தேவதைகளுக்கும் மேம்பட்டவன். பொறாமைப் போய் உன்னைத் தீண்டக்கூட முடியவில்லை.”
“பொறாமையா! பொறாமைக்கு என்னிடத்தில் வேலை ஏது? சோபியா! உன்னை இங்கு கொண்டுவந்து சேர்த்துவிடுவதாய்ப் பொறுப் பேற்றுக் கொண்டேன். அல்லவா! நீ இங்கு வந்தவுடன் உனக்கு இசைந்த காதலனைத் தேடிக்கொள்ளலாம் என்று நான் பெர்ஸபோலியிலேயே சொல்லவில்லையா?”
“ஆம்; நீ சொன்னாய்.”
“உன்னுடைய எல்லையற்ற இந்த ஆனந்தத்தைப் பார்த்த நான், உனக்கு ஒரு கிடைத்தற்கரிய பொருள் கிடைத்திருக்கிறது என்று அனுமானித்தேன்.”
“உன்னுடைய அனுமானம் சரிதான், நாகா”.
“நல்லது. உன்னுடைய காதலனை நான் இங்கு வரவேற்பதற்கோ அல்லது அவர் இருக்குமிடம் சென்று பார்ப்பதற்கோ எனக்கு அனுமதி தருவாயா?”
“நீ ஏன் இவ்வளவு அவசரப்படுகிறாய்?”
“அவசரந்தான் படுகிறேன், சோபியா! நீ சொல்வது பொய் இல்லை.”
நாகதத்தன் தன்னை அடக்கிக் கொள்ள முயன்றான். இனி மேலும், தன்னுடைய கண்ணீரைத் தடுக்க முடியாதே என்ற பயம் சோபியாவுக்கு ஏற்பட்டது. உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டு,
“நீ என் காதலனைப் பார்க்கலாம். ஆனால், ஏதென்ஸ் நகரத்து வாலிபர்களைப் போல் நீயும் ஆடை அணிந்து கொள்ள வேண்டும்.”
“நீ நேற்று எனக்காக வாங்கிவந்திருக்கும் கால் சட்டையையும், மிதியடியையும் போட்டுக் கொண்டால் சரியாய்ப் போய்விடுகிறது.”
“நல்லது; நீ போய் உடுத்திக் கொள். அதற்குள் நான் என் காதலனுக்காக ஒரு மாலை வாங்கி வருகிறேன்.”
“நல்லது” என்று சொல்லிவிட்டு நாகதத்தன் அடுத்த அறைக்குப் போய்விட்டான். சோபியா அங்கிருந்த ஒரு பெரிய கண்ணாடிக்கு முன்னே நின்று தன்னுடைய உடைகளையும் ஆபரணங்களையும் சரிப்படுத்திக் கொண்டாள். பிறகு ஒரு மாலையைக் கண்ணாடிக்குப் பின்புறத்தில் மறைத்து வைத்துவிட்டு, மெதுவாக அடுத்த அறையின் வாசலில் போய் நின்று,
“நாகா! மிகவும் நேரமாகிவிட்டது. என் காதலன் எங்காவது வெளியே போய்விட்டால் பார்க்க முடியாமல் போய்விடும்.”
“சீக்கிரம் வருகிறேன். ஆனால் நீ வாங்கிக் கொண்டு வந்திருக்கி
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 179, புத்தகங்கள், நான், போய், இங்கு, இல்லை, பக்கம், சோபியா, கங்கை, வால்காவிலிருந்து, தன்னுடைய, கொள்ள, நாகதத்தன், கொண்டு, வருகிறேன், நின்று, அடுத்த, “நல்லது, “உன்னுடைய, மேலும், இவ்வளவு, சிறந்த, காதலனை, உன்னுடைய, உனக்கு, “நாகா