வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 178
அவன் தன்னுணர்வு பெற்றபொழுது, அவளுடைய நிலைமையே முற்றிலும் மாறிவிட்டது. இதற்கு முன்னெல்லாம் சோபியா தன்னுடைய சரீரத்தை அலங்கரித்துக் கொள்வதில் கவனம் செலுத்துவது கிடையாது. ஆனால் இப்பொழுது ஜனநாயக ஏதென்ஸ் நகரத்தின் யுவதிகளைப் போல் தன்னையும் அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்தாள். தன்னுடைய தங்க நிறமாக கூந்தலில்,
அழகிய மலர்களைச் சூட்டிக் கொள்வாள். பாதம்வரை தொங்கும் வேலைப்பாடமைந்த மெல்லிய சட்டையையும், அழகிய மேலங்கியையும், கால்களிலே மிருதுவான மிதியடிகளையும் அணிந்து கொள்வாள். அவளுடைய வெண்மையான நெற்றியிலும், ரோஜாப் புஷ்பத்தைப் போன்ற கன்னங்களிலும், பவளத்தைப் போன்ற செவ்விதழ்களிலும், இளமையின் அழகும், ஆரோக்கியத்தின் வனப்பும் கலந்து பிரகாசித்தன. மகிழ்ச்சியும் புன்முறுவலும், அவளுடைய முகத்தில் எப்பொழுதும் தாண்டவமாடிக் கொண்டிருந்தன.
சோபியாவினுடைய இந்த மாறுதலைப் பார்த்த நாகதத்தனுக்கு ஆச்சரியம் மட்டுமல்ல, அதிக ஆனந்தமும் ஏற்பட்டது. அதைப்பற்றி அவன் கேட்டதற்குச் சோபியா,
“நாகா! வாழ்க்கையை இதுவரை துக்கப்படுவதற்குரிய ஒரு பொருளாக மட்டுமே நான் எண்ணியிருந்தேன். ஆனால் என்னுடைய எண்ணம் தப்பு என்று இப்போது எனக்குத் தெரிந்தது. இவ்விதம் ஒரே நோக்கோடு வாழ்க்கையைப் பார்த்தால் அதனுடைய பெருமை குறைந்து விடுகிறது.
“மேலும், நமது உழைக்கும் சக்தியும் பாழாகிவிடுகிறது. தட்சசீலத்தின் எதிர்கால வாழ்வைப்பற்றி நீயும் குறைவாகக் கவலைப்படவில்லை. இருந்தாலும் மனதை நிதானப்படுத்தி, அதற்கு வழிகளை யோசிப்பதிலேயே சக்தி அனைத்தையும் செலுத்துகிறாய்.”
“சோபியா! நீ இன்று இவ்வளவு ஆனந்தமாய் இருப்பதைப் பார்க்கும் போது என் இதயம் பூரிப்படைகிறது.”
“ஏதென்ஸுக்குத் திரும்ப வந்தவுடன் என்னுடைய காதலனையும் அடைந்துவிட்ட எனக்குச் சந்தோஷம் ஏற்படாதா?”
நாகதத்தன் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து,
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 178, அவளுடைய, புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, சோபியா, தன்னுடைய, அவன், அழகிய, என்னுடைய, கொள்வாள், நாகதத்தன், அலங்கரித்துக், முடியவில்லை, இப்போது, சிறந்த, வீட்டைப், அந்த, கொள்ள, தன்னை, அவள்