வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 170
அரசி இப்பொழுது சிறிது சிறிதாக ஆகாரமும் உட்கொள்ள ஆரம்பித்தாள். ஆறாம் நாள் அரசி வைத்தியனை அழைத்து வரச் செய்தாள். அவனைப் பார்த்த அவளுக்கு அடையாளமே தெரியவில்லை. முதலில் தன் மருமகன் வருவதாகவே கருதினாள்! சமீபத்தில் வந்ததும் வைத்தியரை உட்காரச் சொல்லி,
“வைத்தியரே! நான் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த ஜன சஞ்சாரமற்ற பாலைவனத்திலே என்னைக் காப்பாற்றுவதற்கு, கடவுள்தான் தங்களை அனுப்பியிருக்கிறார். தங்களுடைய தேசம் எது?”
“தட்சசீல நகரம்.”
“தட்சசீலமா? அந்தப் புகழ்பெற்ற நகரம் கலைகளின் பிறப்பிடம்; நீங்கள் அதன் ரத்தினம்.”
இல்லை, மகாராணி! அந்தப் புகழ்வாய்ந்த நகரத்தில், நான் ஒரு சர்வ சாதாரண புதிய வைத்தியன்.”
“வைத்தியரே! தாங்கள் ஓர் இளைஞர். ஆயினும், இளமைக்கும் திறமைக்கும் விரோதம் கிடையாது. தங்களுடைய பெயர்?”
“நாகதத்த காப்பியன்.”
“பூராப் பெயரையும் சொல்வதற்கு எனக்குக் கஷ்டமாயிருக்கும். ஆகவே, ‘நாக’ என்று கூறினால் போதுமா?”
“போதும் மகாராணி.”
“தாங்கள் இனிமேல் எங்கே செல்ல உத்தேசம்?”
“முதலில் பெர்ஸபோலி.”
“அப்பால்?”
“பிரயாணம் செய்வதற்கும், தேசங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கும் ஆசைப்பட்டே நான் வீட்டை விட்டுக் கிளம்பினேன்.”
“நாங்களும் பெர்ஸபோலிக்குத்தான் போகிறோம். தாங்களும் எங்களுடனே வரலாம். உங்கள் தேவைகளை எல்லாம் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். ரோஸனா, நீ தான் வைத்தியருடைய சௌகர்யத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். வேலைக்காரர்கள் ஒருவேளை பாராமுகமாக இருந்துவிடலாம்.”
“அம்மா! நானே பார்த்துக் கொள்கிறேன். சோபியாவை அவருக்குப் பணிவிடை செய்வதற்கு நியமித்திருக்கிறேன்.”
“கிரேக்க சோபியாவா? அண்ணன் எனக்காக அனுப்பியிருந்தானே அவளா?”
“ஆம்; அம்மா! அவள் உனக்குச் செய்ய வேண்டிய வேலை ஒன்றுமில்லையல்லவா? மேலும், அவள் கெட்டிக்காரியாகவும் சுறுசுறுப்புள்ளவளாகவும் இருக்கிறாள். ஆகையினால் அவளையே அவருடைய பணிவிடைக்கு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 170, புத்தகங்கள், நான், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, அந்தப், கவனித்துக், அவள், நகரம், மகாராணி, “வைத்தியரே, சிறந்த, இல்லை, அரசி, தங்களுடைய