வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 167
ஆசனத்தில் அமர்ந்திருந்த அந்த அரசன், தனக்கு முன்னே நின்ற வைத்தியனை உச்சி முதல் உள்ளங்கால் வரை கூர்ந்து நோக்கினான். அவனுடைய நீலநிற விழிகள், வைத்தியனுடைய கம்பீரமான தோற்றத்திலே லயித்து விட்டன. தன்னுடையதைப் போன்ற சிறந்த ஆடைகளை அணிவித்தால்
பெர்ஸபோலி நகரத்தின் அழகிய வாலிபர்களில் சிறந்தவனாக அவன் காட்சியளிப்பான் என்று, அரசனுடைய மனம் எண்ணிற்று. மிகுந்த விநயபாவத்தோடு அரசன்,
“தங்கள் தட்சசீலத்தின் வைத்தியரா?”
“ஆம் அரசே!”
“என்னுடைய மனைவி மிகுந்த நோயுற்றிருக்கிறாள். நேற்றிலிருந்து அவளது நிலைமை ரொம்பவும் மோசமாகி விட்டது. எங்கள் வைத்தியர்கள் இருவருடைய மருந்துகளும் பலனளிக்கவில்லை.”
“மகாராணியைப் பரீட்சித்த பின்பு, தங்கள் வைத்தியர்களோடு பேச விரும்புகிறேன்.”
“நல்லது. அவர்கள் இங்கே தயாராய் இருப்பார்கள். நீங்கள் உள்ளே போய்ப் பார்க்கலாம்.”
வெண்மை நிறச் சுவரோடு சுவராகக் காட்சியளித்த வெள்ளைப் படுதா விலக்கப்பட்டவுடன் உள்ளே செல்வதற்கு வழி தெரிந்தது. அரசனும் அவனது இளங்குமரியும் முன்னே செல்ல, அவர்கள் பின்னே வைத்தியன் நடந்தான். உள்ளே யானைத் தந்தங்களைக் கால்களாக உடைய ஒரு கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த வெண்மையான மெத்தையின் மீது நோயாளி படுத்திருந்தாள். அவளுடைய மேனி, வெண்மை நிறத் தோலால் மூடப்பட்டிருந்தது. முகம் மட்டும் திறந்திருந்தது. அரசன் வந்ததைப் பார்த்ததும் வேலைக்காரிகள் ஒதுங்கி நின்றனர். வைத்தியன், அரசியை அருகில் சென்று
பார்த்தான். அவளுடைய முகத்தோற்றமும் சமீபத்தில் நிற்கும் யுவதியின் முகத்தில் இளமை ததும்பியது. அரசியின் வதனத்தில் நடுத்தர வயதின் கம்பீரத் தோற்றம் பரவியிருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 167, புத்தகங்கள், அவளது, அந்த, உள்ளே, சிறந்த, வால்காவிலிருந்து, அரசன், கங்கை, பக்கம், மிகுந்த, வெண்மை, அவளுடைய, முன்னே, வைத்தியன், மெல்லிய, விட்டது, செந்நிறமும், காணப்பட்டது, அரசனுடைய, வேலைக்காரிகள்