வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 166
“தட்சசீலம்.”
தட்சசீலம் என்ற பெயரைக் கேட்ட உடனேயே அந்த அரசு ஊழியர்கள் இன்னும் அதிகமான மரியாதை செலுத்த ஆரம்பித்தனர்.
“எங்கள் மகாராணி-சக்கரவர்த்தியின் சகோதரி நோயுற்றிருக்கிறார். அவருக்குத் தாங்கள் வைத்தியம் செய்ய முடியுமா?”
“ஏன் முடியாது? நான் ஒரு வைத்தியன்”
“ஆனால் உங்களுடைய இந்த உடைகள்...”
“வைத்தியம் செய்ய வேண்டியவன் நான்தான். இந்த உடைகள் அல்ல.”
“ஆனாலும் இவைகள் மிகவும் அழுக்காயிருக்கின்றன.”
“இன்றைக்கு இதை நான் மாற்றியிருக்க வேண்டியவன். கொஞ்சம் நில்லுங்கள், இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி வைத்தியர் முந்தியதைப் போல் அவ்வளவு அழுக்கில்லாத ஒரு கம்பளி உடையை உடுத்திக் கொண்டு மருந்துப் பொட்டலங்கள் நிரம்பிய ஒரு தோல் பையைக் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களோடு புறப்பட்டார்.
இதுவும் யாத்திரா விடுதி என்று சொல்லப்பட்டாலும் இதன் முன்னால்
கழுதைகளின் லத்தியோ, பிச்சைக்காரர்களின் கூட்டமோ காணப்படவில்லை. இங்கு எல்லாம் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தன. மாளிகையின் வாயிற்படியில் அழகிய கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. வாசலில் மெல்லிய படுதா தொங்க விடப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்தே பளிங்குக் கற்களில் செய்யப்பட்ட உருவங்களைப்போல், அழகிய பெண்கள் நின்று கொண்டிருந்தனர். வாசலை அடைந்ததும், வைத்தியனை அவ்விடத்தே நிறுத்திவிட்டு, ஒருவன் ஒரு அழகியின் காதருகே ஏதோ சொன்னான்: அவள் மெதுவாகக் கதவைத் திறந்தாள். மத்தியில் படுதா தொங்கவிடப்பட்டிருந்ததால், உள்ளே நடப்பது என்ன என்று தெரியவில்லை. சிறிது நேரத்தில் திரும்பிவந்த அழகி வைத்தியனைத் தன்னுடன் வரும்படி அழைத்தாள்.
உள்ளே நுழைந்ததும் அறை பூராவும் நிறைந்திருந்த நறுமணம் அவனை வரவேற்றது. அவன் நாலா பக்கங்களிலும் தன் பார்வையைச் செலுத்தினான். அந்த அறை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு விரித்திருந்த கம்பளம், படுதாக்கள், மெத்தைகள், சிலை விளக்குகள், படங்கள், உருவச்சிலைகள் யாவும் இன்றுவரை வைத்தியன் பார்க்காத அழகுடையதாய் இருந்தன. எதிரே சுவரோரமாக ஒரு பெரிய மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. அதிலே கிடந்த இரண்டு மூன்று திண்டுகளில் ஒன்றின் மீது சாய்ந்து கொண்டு நடுத்தர வயதுள்ள ஓர் ஆடவன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய காதுவரை நீண்டு அடர்த்தியாயிருந்த மீசையிலே ஆங்காங்கே நரை மயிர்கள் தென்பட்டன. அவனுடைய சாம்பல் நிறமான பெரிய விழிகளில் துக்கக்குறி படிந்திருந்தது.
அவனுக்குப் பக்கத்திலே, ஓர் இணையற்ற அழகிய யுவதி அமர்ந்திருந்தாள். அவளுடைய சரீரம் நிறத்தினால் மட்டுமல்ல, மிருதுத் தன்மையினா
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 166, புத்தகங்கள், வால்காவிலிருந்து, பக்கம், அழகிய, கங்கை, படுதா, பெரிய, அவனுடைய, இருந்தன, உள்ளே, உடைகள், அந்த, சிறந்த, செய்ய, நான், வேண்டியவன், கொண்டு