வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 165
உத்தியோகஸ்தர்கள் விசாரித்தார்கள். முடிவில் மற்றொரு பிராயண விடுதியில் ஒரு ஹிந்து வைத்தியர் தங்கி இருப்பதாகத் தெரியவந்தது. அந்தப் பிரதேசத்தில், மழை பெய்வது மிகவும் அபூர்வம். மேலும், மழைக்காலமும் எப்பொழுதோ முடிந்துவிட்டது. ஆப்பிள், திராட்சை, தர்பூஜா முதலிய விலை குறைந்த பழங்கள், அந்த விடுதிகளிலே விற்பனையாகிக் கொண்டிருந்தன. அரசு ஊழியர்கள் மூவரும் ஹிந்து வைத்தியர் இருக்கும் இடத்திற்குச் சென்ற பொழுது, இவர் ஒரு பெரிய தர்பூஜா பழத்தை நறுக்கித் தின்று கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில், அவரைப் போலவே பிச்சைக்காரர்கள் மாதிரி உடை உடுத்திக் கொண்டிருந்த ஈரானியர்கள் பலர் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னாலும் தர்பூஜாப் பழங்கள் இருந்தன.
அரசு ஊழியர்களைப் பார்த்ததும், அந்தப் பிச்சைக்காரர்கள் பயந்து நாலா பக்கமும் ஓடிவிட்டனர் அங்கேயே நின்றுகொண்டிருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி, “சுவாமி! இவர்தான் ஹிந்து வைத்தியர்” என்று அவர்கள் கூட வந்தவன் சொன்னான்.
வைத்தியனுடைய கிழிந்த துணியைப் பார்த்த அவர்களுக்கு முதலில் அருவருப்புத் தோன்றியது. ஆனால், அவனுடைய முகத்தைப் பார்த்தபொழுது அந்த முகத்திற்கும் கந்தல் துணிகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரிந்தது. அந்த முகத்திலே, பயத்தின் சின்னமோ ஏழ்மையின் ரேகையோ காணப்படவில்லை. அந்த நீல நிறக் கண்களின் ஒளி, உத்தியோகஸ்தர்களின் மனத்திலே ஒரு மரியாதையை உண்டாக்கிற்று. அவர்களுடைய நெற்றிச்
சுருக்கங்கள் மறைந்துவிட்டன. மரியாதை தொனிக்கும் குரலில்,
“நீங்கள் தான் வைத்தியரா?” என்று கேட்டார்கள்.
“ஆம்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 165, அந்த, புத்தகங்கள், பக்கம், அவர்களுடைய, இருக்கும், ஹிந்து, தங்கும், வால்காவிலிருந்து, கங்கை, வைத்தியர், பார்த்ததும், அந்தப், தர்பூஜா, அவர்களுக்கு, பிச்சைக்காரர்கள், அரசு, பழங்கள், விலை, உத்தியோகஸ்தர்கள், அரசாங்க, பிரயாண, இவ்வளவு, தங்குவதற்காக, வியாபாரிகள், சிறந்த, தங்கி, இந்தப், விடுதிகளிலே