வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 163
“வடக்கிலுள்ள தனித்தனி ஜன ஆட்சிகளைச் சேர்த்து ஒரு சங்கமாக ஆக்க முடியாதென்றால் நந்தனை அரசனாக ஏற்றுக் கொள்வதில் தவறொன்றுமில்லை. மேற்குக் காந்தாரத்தைப் போல் நாமும், தாரயோஷு க்கு அடிமையாவது நல்லதா அல்லது நம்முடைய பாரத நாட்டின் சக்கரவர்த்தி ஒருவனுக்கு அடிமையாயிருப்பது நல்லதா?”
“விஷ்ணுகுப்த! நீ அரசனுடைய ஆட்சியைப் பார்த்ததில்லை. பார்த்திருந்தால், அங்கு பொது ஜனங்கள் அடிமைகளை விட உயர்ந்த நிலையில் வாழவில்லை என்பது உனக்குத் தெரிய வரும்.”
“ஆம்; நான் மேற்குக் காந்தாரத்தைத் தவிர, வேறு எந்த அரசனுடைய நாட்டையும் மிதித்ததில்லை. ஆனால், தேசங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசை நிறைய இருக்கவே செய்கிறது. ஆயினும் உன்னைப் போல் இடை இடையே ஊர் சுற்றிக் கொண்டிராமல், கல்வியைத் தொடர்ந்து கற்று முடித்துவிட ஆசைப்பட்டேன். இதனால் அந்நிய நாட்டார்களுக்கு அடிமையாகும் வெறுக்கத்தக்க நிலையிலிருந்து தப்ப வேண்டுமானால், சிறிய சிறிய எல்லைகளை உடைத்து ஒரு பெரிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எனது கருத்திலே மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிட முடியாது. கோரேஷ்,
தாரயோஷ் இவர்களுடைய வெற்றிக்கும் இதுதான் முக்கிய காரணம்.”
“அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றியடைந்திருக்கிறார்களென்பதை நான் நெருங்கிப் பார்க்க விரும்புகிறேன்.”
“நெருங்கிப் பார்க்கவா?”
“ஆம்; கிழக்கே நான் மகதம் வரை போய்ப் பார்த்திருக்கிறேன். நந்தனுடைய ராஜ்யத்தை நமது தட்சசீலத்தோடு ஒப்பிட்டோமானால், அதை ஒரு நரகமென்றே தான் சொல்ல வேண்டும். நந்தனுடைய ராஜ்யம், பலமுள்ளதாய் இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் அந்தப் பலம் ஏழைகளை நசுக்குவதற்காக, உழைப்பாளிகள், விவசாயிகள், தொழிலாளிகள், அடிமைகள் இவர்களின் தரித்திர வாழ்க்கையை வருணிக்கவே முடியாது.”
“நந்தனுடைய ராஜ்யத்தில் தட்சசீலத்தைப் போல தன்னம்பிக்கை உள்ளதும், சுதந்திர ஆர்வம் உள்ளதுமான ஒரு ஜன ஆட்சி இணைந்திருக்காமையால்தான், இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.”
“இணைந்திருக்கிறது விஷ்ணுகுப்த! லிச்சவியர்களுடைய ஜன ஆட்சி நமது தட்சசீலத்தைவிடப் பலம் பொருந்தியதாய் இருந்தது. ஆனால், இன்று இந்த வைசாலி மகதத்தின் பாதங்களில் அடிமையாகிக் கிடக்கிறது. மகத வேடர்களின் பலம் பொருந்திய நாய்கள்தான் லிச்சவியர்கள். அந்த வைசாலி நகரத்தைப் போய்ப் பார். இன்று அது பாழ்பட்டுக் கிடக்கிறது. கடந்த நூற்றைம்பது வருடங்களிலே, அதனுடைய ஜனத்தொகை மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது! நூற்றுக்கணக்கான வருடங்களாகத் தேடிச் சேர்த்த
அவர்களுடைய தன்னம்பிக்கை உணர்ச்சியும், சுதந்திர ஆர்வமும் இப்பொழுது மகத ராஜ்யத்தின் படைவீரர்கள் ஆவதற்கே உபயோகமாகிறது. ஒரு பெரிய ராஜ்யத்தினிடம் ஒரு முறை தன்னை ஒப்புவித்து விட்டால் பிறகு அதனுடைய பிடியி
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 163, புத்தகங்கள், பலம், வால்காவிலிருந்து, நான், கங்கை, பக்கம், தன்னம்பிக்கை, நந்தனுடைய, நமது, இன்று, கிடக்கிறது, அதனுடைய, வைசாலி, போய்ப், ஆட்சி, சுதந்திர, சிறிய, போல், மேற்குக், நந்தனை, சிறந்த, நல்லதா, அரசனுடைய, வேண்டும், பெரிய, பார்க்க, “ஆம், முடியாது