வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 161
“பலசாலிகளாவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?”
“இனிமேல் இந்தச் சிறிய சிறிய ஜன ஆட்சி உபயோகப்படாது! இந்தச் சிறிய சிறிய ஜன ஆட்சிகளை ஒன்று சேர்த்து ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும்."
“இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தில் சேரும் சிறிய சிறிய ஜன ஆட்சிகளின் ஸ்தானம் என்ன?”
“அவைகள் தங்கள் தனித்துவத்தை மறந்துவிடாது.”
“இது தகிடுதத்தமான சொல் விஷ்ணுகுப்த! எஜமானனுக்கும் அடிமைக்கும் உள்ள தொடர்பில் தனித்துவம் இருக்க முடியுமா?”
“நாகதத்த! ஸ்தானம் கிடைப்பது ஆசையையோ அல்லது அபிப்பிராயத்தையோ பொறுத்ததல்ல; தகுதியைப் பொறுத்தது. நம்முடைய தட்சசீலகாந்தாரத்திற்குத் தகுதியிருக்குமானால், அந்தச் சாம்ராஜ்யத்தில் அது ஓர் உயர்ந்த ஸ்தானத்தை வகிக்கும். இல்லையானால், அதற்குக் கிடைப்பது சாதாரண இடந்தான்.”
“ஆம், அடிமை ஸ்தானம்.”
“தாரயோஷினுடைய ஆட்சியில் தங்கிவிட்ட மேற்குக் காந்தாரத்தின் நிலையைவிட, அந்த அடிமை ஸ்தானம் உயர்ந்ததாயிருக்கும். நாகதத்த! என்னுடைய யோசனை இருக்கட்டும். இனிமேல் நாம் இவ்விதம் சிறிய சிறிய சமூகங்களாகப் பிரிந்திருந்து நம்முடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று நிச்சயமாகத் தெரிந்திருக்கிறதல்லவா? அப்படியானால் நம்முடைய சுதந்திரத்தைக் காப்பாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும், நீயே சொல்!”
“நாம் நமது ஜன ஆட்சியின் சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டும். எந்த ஒரு அரசனுடைய ஆதீனத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. சிறிய சிறிய
உருவத்திலிருந்து கொண்டு இனிமேல் நாம் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். இதற்காக, நாம் பஞ்சாபைச் சேர்ந்த எல்லாச் சிறிய ஜன ஆட்சிகளையும் ஒன்று சேர்த்து ஓர் ஐக்கிய சங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.
“அந்த ஐக்கியத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ஜன ஆட்சியும்,
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 161, சிறிய, நம்முடைய, நாம், புத்தகங்கள், சுதந்திரத்தைக், நமது, ஸ்தானம், வேண்டும், பக்கம், என்ன, வால்காவிலிருந்து, முடியாது, பெரிய, கங்கை, சொல், கிடைப்பது, இனிமேல், கொள்ள, காப்பாற்றிக், அடிமை, ஒன்று, ஆட்சி, மேற்குக், இந்தச், சிறந்த, ஸ்தாபிக்க, சேர்த்து, சாம்ராஜ்யத்தில்