வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 160
நாகதத்தன்
காலம் : கி.மு. 335
“எது சரி என்பதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும். விஷ்ணு குப்த! மனிதர்களாகப் பிறந்திருக்கும் நமக்குச் சில கடமைகளும் இருக்கின்றன.
ஆகையால் நாம் எது சரி என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.”
“ஆம்; கடமைதானே நமது தர்மம்.”
“தர்மம்! அது ஓர் ஏமாற்று என்றே நான் நினைக்கிறேன். பிறருடைய உழைப்பின் பலனை அபகரிப்பவர்கள் அமைதியோடு அந்தப் பொருள்களை அனுபவிப்பதற்குச் சந்தர்ப்பம் கொடுப்பதற்காகவே இந்தத் தர்மம் சிருஷ்டிக்கப்பட்டிருந்தது. தரித்திரர்களைப் பற்றியோ, பலவீனர்களைப் பற்றியோ இந்தத் தர்மம் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறதா? விரிந்த இந்த உலகத்திலே தர்மத்தை அங்கீகரிக்காத மனித ஜாதியே கிடையாதென்று சொல்லலாம். ஆனால் அவர்கள் அடிமைகளும் மனிதர்கள் தான் என்று எப்பொழுதாவது நினைத்ததுண்டா? சரி, அடிமைகள் இருக்கட்டும்; குலப்பெண்கள் விஷயத்தை எடுத்துக் கொள்வோம், அவர்களைப் பற்றி இந்தத் தர்மம் நியாயம் வழங்கியிருக்கிறதா? தனம் மட்டும் இருந்தால் போதும்! ஒன்று இரண்டல்ல, நூறு பெண்களைக்கூட ஒரு மனிதன் விவாகம் செய்து கொள்ளலாம்! இந்தப் பெண்களுடைய வாழ்க்கை அடிமைகளைப் பார்க்கிலும் உயர்ந்ததாகவா இருக்கிறது? ஆனால் தர்மம் இதை அங்கீகரிக்கிறது - சரி என்ற சொல்லுக்கு மதம் சொல்லும் பொருளை நான் கொள்ளவில்லை. களங்கமற்ற மனித மனம் கொள்ளும் பொருளையே நான் ஏற்கிறேன்.”
“ஆனால் எது தேவையோ, அதையே சரி என்று நான் கூறுகிறேன்.”
“அப்படியானால் விஷ்ணுகுப்த! சரி, தவறு என்ற பேதமே இருக்க முடியாதே!”
“பேதம் இருக்கவே செய்யும் நாகதத்த! தேவையென்று நான் சொல்லும்பொழுது, தனிப்பட்ட ஒருவனுடைய தேவையையே நான் குறிப்பிடவில்லை.” “கொஞ்சம் விளக்கமாகச் சொல், விஷ்ணுகுப்த!”
“நம்முடைய இந்த தட்சசீலம் - காந்தாரத்தையே எடுத்துக் கொள்வோம்; நமக்கு நமது சுதந்திரம் மிகப் பிரியமானது; அந்த விருப்பம் சரியான
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 160, நான், தர்மம், புத்தகங்கள், இந்தத், வால்காவிலிருந்து, கங்கை, பக்கம், கொள்வோம், விஷ்ணுகுப்த, எப்பொழுதாவது, எடுத்துக், மனித, நமது, சிறந்த, பற்றி, நாம், வேண்டும், பற்றியோ