வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 159
அவனுடைய சரீரம் பலம் இழந்துவிட்டது. நகர எல்லையை அவன் அடைந்தபோது சூரியன் அஸ்தமித்து விட்டான். நகர வாசலும் சாத்தப்பட்டிருந்தது. வாசலுக்கு வெளியே உள்ள ஒரு குடிசையில் தங்கிய பிரசேனஜித்தன், அந்த இரவே இறந்து போய்விட்டான். மறு நாள் காலையில் ராணியினுடைய அழுகைச் சப்தம் கேட்டு, அஜாதசத்ருவும் வஜ்ராவும் ஓடிவந்தனர். பாவம், உயிர்நீத்துக் கிடக்கும் அந்தக் கட்டையை ஆடம்பரமாகத் தகனம் செய்வதைத் தவிர இனி வேறு என்ன செய்ய முடியும்? ஆம்; இது பந்துலனின் கொலைக்குப் பழி; அடிமைத்தனத்தை அங்கீகரித்த தீய செயலின் விளைவு.
____________________________________________________
* இது இன்றைக்கு 100 தலைமுறைகளுக்கு முந்திய சரித்திரக் கதை. அந்தக் காலத்திலே பலவித வேற்றுமைகளும் விரோதங்களும் மலிந்து விட்டன. தனம் படைத்த வியாபாரி வர்க்கம், சமூகத்தில் பிரபலமான ஸ்தானத்தைப் பெற்றுவிட்டது. மோட்சத்திற்கு மார்க்கத்தைக் கூறுபவர்களும், நரகத்திலிருந்து மீட்பவர்களுமாகப் பல வழிகாட்டிகள் தோன்றியிருந்தனர். ஆனால் கிராமங்கள் தோறும் அடிமைவாழ்வு என்ற நரகாக்னி சுடர் விட்டெரிவதைப் பார்த்தும் அதைப் பொறுத்தவரை எல்லோரும் கண்ணை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 159, புத்தகங்கள், வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, அந்தக், வெளியே, பிரபலமான, சிறந்த, பிரசேனஜித்தன்