வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 158
அகமகிழ்ந்து ஏற்றுக்கொண்டதோடு மஹாநாமருடைய ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டு சந்தோஷமாக அவர்களிடம் விடைபெற்று கபிலவஸ்துவிலிருந்து பயணமானான்.
ஒரு தாசி மகனுடைய பாதங்கள் பட்டுவிட்டதால், ஜனசபை மண்டபத்தின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது. ஆகவே சுத்தம் செய்ய வேண்டியது முக்கியமல்லவா? அநேக அடிமைகள் ஆசனங்களை விளக்கிக் கழுவிச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தனர். இந்த வேலை செய்து கொண்டிருந்தவர்களில் ஒரு கிழவி, விளக்கும்போதே விதூடபனைக் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள். விதூடபனுடைய சேனை வீரன் ஒருவன், தன்னுடைய ஈட்டியை மண்டபத்திலே மறந்து வைத்துவிட்டான். அதையெடுப்பதற்காகத் திரும்பி வந்த அவன், இந்தக் கிழவி அரசகுமாரனைத் திட்டுவதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டான். மெதுவாக இங்கு நடந்த எல்லா விஷயங்களும் இளவரசன் விதூடபனுக்கு எட்டியது. அவனுக்குச் சாக்கியர்கள் மீது அடங்காத கோபம் உண்டாயிற்று. கபிலவஸ்துச் சாக்கியர்களை அழித்துவிடுவது என்று சங்கல்பம் செய்து கொண்டான். பிற்காலத்தில் இதைச் செய்து முடித்தான். இளவரசனுடைய கோபத்திற்கு மற்றொரு இலக்கு அரசன் பிரசேனஜித்தன். தாசியினுடைய வயிற்றிலே தான் பிறக்கும்படி செய்தவன் அந்த அரசன் தானே?
தீர்க்க காராயணன் தன்னுடைய மாமனும் மைத்துனர்களும் அரசனால் ஏமாற்றிப் படுகொலை செய்யப்பட்டதை மறக்கவே இல்லை. அவனால்
மறக்கவும் முடியாது. விருத்தாப்பிய தசையிலே தான் செய்த குற்றங்களுக்காகப் பச்சாதாபப்பட்ட பிரசேனஜித்தன், எல்லோரிடமும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிக நம்பிக்கையும் அன்பும் காட்ட ஆரம்பித்தான். ஒரு நாள் மத்தியான வேளை. போஜனத்தை முடித்துக் கொண்ட அரசனுக்குக் கௌதம புத்தருடைய ஞாபகம் வந்தது. கொஞ்ச தூரத்தில் சாக்கியர்களுடைய ஒரு கிராமத்தில் அவர் இருப்பதாகத் தெரிந்த அரசன் பிரசேனஜித்தன் உடனே சேனைத்தலைவன் தீர்க்க காராயணன் இன்னும் சில சேனை வீரர்கள் ராணிகள் சகிதம் அந்தக் கிராமத்திற்குப் பயணமானான். புத்தர் தங்கியிருந்த மாளிகைக்குள் நுழையும் பொழுது, தன்னுடைய ராஜ மகுடம், வாள் முதலிய ராஜ சின்னங்களை தீர்க்ககாராயணனிடம் கொடுத்து வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்று புத்தருடைய உபதேசத்திலே ஈடுபட்டு விட்டான். ஆனால் தீர்க்ககாராயணனோ ஏற்கனவே இளவரசன் விதூடபனோடு உறவு வைத்திருந்தானாகையால், உடனே ராணியை மட்டும் அந்த இடத்திலே நிறுத்திவிட்டு அரச சின்னங்களோடு ஸிராவஸ்தி நகரை அடைந்து விதூடபனைக் கோசல தேசத்திற்கு அரசன் என்று விளம்பரப்படுத்தினான்.
கௌதம புத்தருடைய உபதேசத்தில் வெகு நேரம் திளைத்திருந்த
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 158, புத்தகங்கள், அரசன், செய்து, தன்னுடைய, புத்தருடைய, இளவரசன், வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, பிரசேனஜித்தன், அந்த, கௌதம, உடனே, தான், காராயணன், தீர்க்க, சேனை, பயணமானான், சிறந்த, சுத்தம், கிழவி, விதூடபனைக், கொண்டான்