வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 155
“ஆம். கோழைத்தனம் மட்டுமல்ல, பந்துல்! அது மித்திரத்துரோகமும் ஆகும்,”
“எனக்கு என்னைப் பற்றிக் கவலை கிடையாது மல்லிகா! யுத்தத்தில்
எத்தனையோ முறை சாவின் வாயிலிருந்து மீண்டிருக்கிறேன். என்னை மரணம் எந்த நேரமும் ஆலிங்கனம் செய்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”
பட்டத்தரசி மல்லிகாதேவி - ஆம், ஒரு சாதாரண ஏழையின் வயிற்றில் பிறந்து, தன்னுடைய அருங்குணத்தால் பட்டத்தரசி ஆகிய மல்லிகா தேவி, இறந்து போய் விட்டாள். அவள் இருந்திருந்தால் அரசன் பிரசேனஜித்தன் எடுப்பார் கைப்பிள்ளையாவதற்கு விட்டிருக்க மாட்டாள். எல்லைப் புறத்தில் கலகம் நடப்பதாகக் கூறி. அதை சமாளிப்பதற்காக, அரசன் பந்துலனுடைய மக்களை ஒரு பக்கத்திற்கு அனுப்பி வைத்தான். அங்கு அவர்கள் வெற்றி பெற்றுத் திரும்பி வந்து கொண்டிருக்கையிலே, அவர்களை எதிர்க்கும் படி சூழ்ச்சி செய்து அரசன் பந்துலனையும் அனுப்பினான். தந்தைக்கும் மக்களுக்கும் யுத்தம். இந்த விதமாக தகப்பனும் பத்து மக்களும் ஒரே காலத்தில் மடியும்படி செய்தான் அரசன். இந்தத் துக்ககரமான செய்தியைத் தாங்கிய ஓலை கைக்குக் கிடைத்த போது, மல்லிகா கௌதம புத்தருக்கும் அவருடைய சிஷ்ய பிட்சுகளுக்கும் போஜனம் செய்விக்கத் தயாராயிருந்தாள். அவளுடைய மருமக்கள் பத்து பேரும் மிகுந்த அன்போடு, பலவித ருசியுள்ள உணவைத் தயார் செய்திருந்தனர். ஓலையைப் படித்த மல்லிகாவின் இதயத்திலே நெருப்புப் பற்றியது. ஆயினும் தன்னைச் சமாளித்துக் கொண்டாள். கண்களில் கண்ணீரோ, முகத்திலே வருத்தக் குறியோ கூடத் தென்படாமல் அடக்கிக் கொண்டாள். ஓலையைத் தனது முந்தானையிலே முடிந்து கொண்டு, புத்த பகவானுக்கும் அவரது சீடர்களுக்கும் உபசாரத்தோடு அமுது படைத்தாள்.
அவர்களுடைய போஜனம் முடிந்ததும், புத்தருடைய உபதேசங்களைச் சிரத்தையோடு கேட்டாள். முடிவில் அந்த ஓலையை எடுத்து வாசித்தாள். பந்துல மல்லனுடைய குடும்பத்தாரின் மீது இடியே விழுந்து விட்டது. மல்லிகா தைரியம் உடையவள். ஆனால் அந்த இளம் விதவையருக்குத் தைரியம் ஊட்ட புத்தர் பிரானாலும் முடியவில்லை.
நாட்கள் செல்லச் செல்ல, அரசன் பிரசேனஜித்தனுக்கு உண்மை புலனாயிற்று. மிகுந்த பச்சாதபப் பட்டான். ஆயினும் என்ன? அரசன் தன்னு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 155, அரசன், புத்தகங்கள், மல்லிகா, பக்கம், வால்காவிலிருந்து, செய்து, மிகுந்த, கங்கை, ஆயினும், கொண்டாள், தைரியம், அந்த, போஜனம், கோழைத்தனம், எல்லைப், புறத்தில், சிறந்த, பட்டத்தரசி, பத்து