வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 146
ரோஜ்மல்லன் உட்கார்ந்தவுடனே மற்றும் இரண்டு மூன்று அங்கத்தினர்கள் இதே அபிப்பிராயத்தைத் தெரிவித்தனர். சில அங்கத்தினர்கள் பரீட்சிக்க வேண்டிய அவசியமில்லையென்றும் வாதித்தனர். கடைசியாகச் சமூகத்தலைவர் தீர்ப்புக் கூறினார்.
“பூஜ்ய சபையோரே! சிரஞ்சீவி பந்துலனை உபசேனாதிபதி ஆக்குவதற்குக் கொஞ்சம் அபிப்பிராய பேதம் இருப்பது தெரிகிறது. ஆகையால் வாக்கு (ஓட்டு) எடுக்க வேண்டியது முக்கியமாகிவிட்டது. ஓட்டுக் குச்சிகளை விநியோகிப்பவர் உங்களிடம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஒரு கையில் சிவப்பு நிறக் குச்சிகள் உள்ள பையும் மற்றொரு கையில் கறுப்பு நிறக் குச்சிகள் உள்ள பையும் இருக்கின்றன. சம்மதம் தெரிவிப்பதற்கு அடையாளமாக உள்ளது செந்நிறக் குச்சி. இல்லை என்பதற்குக் கரியநிறக் குச்சி. சிரஞ்சீவி ரோஜ்மல்லனுடைய அபிப்பிராயத்தை ஆதரிப்பவர்கள் கரிய நிறக்குச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய அசல் பிரேரணையை
ஆதரிப்பவர்கள், செந்நிறக் குச்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்.”
வாக்கெடுப்பதற்குரிய குச்சிகளைக் கொடுப்பவன், குச்சிகளுடன் ஒவ்வோர் அங்கத்தினரிடமும் சென்றான். அங்கத்தினர் ஒவ்வொருவரும், அவரவர் விரும்பும் நிறக் குச்சி ஒன்றையெடுத்துக் கொண்டனர். அவன் திரும்பி வந்த பின் சமூகத்தலைவன் மீதமுள்ள குச்சிகளை எண்ணிப் பார்க்க சிவப்புக்குச்சிகள் அதிகமாகவும், கருப்புக் குச்சிகள் குறைவாகவும் இருந்தன. ஆகவே கரிய நிறக்குச்சிகள் அதிகமாக எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது. சமூகத்தலைவன் தீர்ப்புக் கூறினான்.
“பூஜ்ய சபையோர்களே! கரிய நிறக்குச்சிகள் அதிகமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், சிரஞ்சீவி ரோஜ்மல்லனுடைய அபிப்பிராயத்தை ஆதரிப்பவர்களே அதிகமாயிருப்பது நிர்ணயமாகிறது. மரியாதை மிக்க அங்கத்தினர்கள் இப்பொழுது சிரஞ்சீவி பந்துலனை எவ்வித பரீட்சைக்கு உட்படுத்த வேண்டுமென்பதை முடிவு செய்ய வேண்டும்.”
அதிக நேரம் வாத-விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக, மரங்களினால் செய்யப்பட்ட உயரமான ஏழு முளைகளை வரிசையாக நட்டு, அவைகளை வாளினால் ஒரே மூச்சில் பந்துலன் வெட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக அடுத்த ஏழாம் நாளையும் நிச்சயித்துவிட்டுச் சபை கலைந்தது.
குறிப்பிட்ட தினத்தில் குசீனாராவின் ஆண்களும் பெண்களும் மைதானத்தில் கூடியிருந்தனர். மல்லிகாவும் அங்கு வந்திருந்தாள். சிறிது சிறிது
தூரத்தில் கடினமான ஏழு மரமுளைகள் நிறுத்தப்பட்டிருந்தன. சமூகத் தலைவனின் உத்திரவைப் பெற்ற பந்துலன் தன்னுடைய வாளாயுதத்தைக் கரத்தில் ஏந்தினான். கூடியிருந்த ஜனத்திரள் இவனையே கூர்ந்து நோக்கியது. பந்துல
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 146, புத்தகங்கள், சிரஞ்சீவி, வேண்டும், பக்கம், குச்சி, கரிய, நிறக், குச்சிகள், வால்காவிலிருந்து, அங்கத்தினர்கள், கங்கை, நிறக்குச்சிகள், சமூகத்தலைவன், ஆதரிப்பவர்கள், அதிகமாக, சிறிது, பந்துலன், முடிவு, எடுக்கப்பட்டிருக்கின்றன, அபிப்பிராயத்தை, சிறந்த, குச்சிகளை, ஆகையால், பந்துலனை, “பூஜ்ய, கையில், சபையின், தீர்ப்புக், செந்நிறக், பையும், உள்ள, ரோஜ்மல்லனுடைய