வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 145
குசீனாராவினுடைய சபா மண்டபத்திலே இன்று பெரிய கூட்டமாய் இருந்தது. ஜன சபையின் அங்கத்தினர்கள் எல்லோரும் கட்டிடத்திற்குள்ளே அமர்ந்திருந்தனர். பார்வையாளர்களான ஆண்களும் பெண்களும் ஏராளமாகக் கட்டிடத்திற்கு வெளியே மைதானத்தில் நின்று கொண்டிருந்தனர். மண்டபத்தின் ஒரு கோடியில் குறிப்பிட்ட ஆசனத்தின் மீது சமூகத்தலைவன் அமர்ந்திருந்தான்; அவன் எழுந்து நின்று அங்கத்தினர்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.
“பூஜ்ய சபையோரே! இன்று இச்சபை கூட்டப்பட்டிருப்பதின் காரணத்தை முதலில் அங்கத்தினர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நம்முடைய மதிப்பிற்குரிய சிரஞ்சீவி பந்துலன், தட்சசீலத்திலே யுத்தக் கலையில் தேர்ச்சி பெற்று மல்லர்களுடைய கௌரவத்தை உயர்த்தி வந்திருக்கிறான். அவனுடைய அஸ்திர வித்தையின் நிபுணத்துவத்தை குசீனாராவுக்கு வெளியிலுள்ளவர்களும் போற்றிப் புகழ்கிறார்கள் என்பது சபையோருக்கும் தெரிந்ததுதான். அவன் இங்கு வந்து நான்கு வருஷங்கள் ஆகிவிட்டன. சமூகத்தின் சிறிய-பெரிய வேலைகளை, நான் என் சொந்தப் பொறுப்பிலே அவனிடம் ஒப்படைத்ததுண்டு. அந்த வேலைகளை அவன் மிகுந்த ஊக்கத்தோடும் சிரத்தையோடும் பூர்த்தி
செய்தான். இப்பொழுது அவனுக்குச் சமூகத்தின் ஒரு நிரந்தரமான பதவியைக் கொடுத்துக் கௌரவிக்க வேண்டும். அதற்காக இந்தப் பிரேரணையை உங்கள் முன் கொண்டு வருகிறேன். இனி, பிரேரணையைக் கேளுங்கள்.”
“பூஜ்ய சபையோரே! சிரஞ்சீவி பந்துலனுக்கு உபசேனாதிபதி பதவி அளிக்கப்படுகிறது. மரியாதை மிக்க அங்கத்தினர்களில் இதை அங்கீகரிப்போர் மௌனமாயிருக்கட்டும். அங்கீகரிக்க விருப்பமில்லாதவர் தெரிவிக்கட்டும்.”
“இரண்டாவது முறை பூஜ்ய சபையோரே! சிரஞ்சீவி பந்துலனுக்கு, உபசேனாதிபதி பதவி அளிக்கப்படுகிறது. மரியாதைமிக்க அங்கத்தினர்களில் அதை அங்கீகரிப்போர் மௌனமாயிருக்கட்டும்; அங்கீகரிக்க விருப்பமில்லாதவர் தெரிவிக்கட்டும்.”
“மூன்றாவது முறை பூஜ்ய சபையோரே! சிரஞ்சீவி பந்துலனுக்கு, உபசேனாதிபதி பதவி அளிக்கப்படுகிறது. மரியாதைமிக்க அங்கத்தினர்களில் இதை அங்கீகரிப்போர் மௌனமாயிருக்கட்டும். அங்கீகரிக்க விருப்பமில்லாதவர் தெரிவிக்கட்டும்.”
இந்த நேரத்தில், ரோஜ்மல்லன் என்ற ஓர் அங்கத்தினன் தன்னுடைய மேல் உத்தரீயத்தை இடது தோள் பக்கம் போட்டுக் கொண்டு, மரியாதை நிறைந்த பாவத்தோடு எழுந்து நின்றான்.
தலைவர்;- “மரியாதை மிக்க அங்கத்தினர் ஏதேனும் சொல்ல விரும்பினால் சொல்லலாம்.”
ரோஜ்மல்லன்:- “பூஜ்ய சபையோரே! சிரஞ்சீவி பந்துலனுடைய
தகுதியைப் பற்றி எனக்குச் சந்தேகம் கிடையாது. ஆனால், அவன் உபசேனாதிபதி ஆக்கப்படும் முறையையே நான் ஆட்சேபிக்க விரும்புகிறேன். யாராயிருந்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 145, சிரஞ்சீவி, புத்தகங்கள், சபையோரே, பக்கம், அவன், உபசேனாதிபதி, அங்கத்தினர்களில், மௌனமாயிருக்கட்டும், அங்கீகரிப்போர், பந்துலனுக்கு, அங்கீகரிக்க, அளிக்கப்படுகிறது, பதவி, விருப்பமில்லாதவர், வால்காவிலிருந்து, கங்கை, “பூஜ்ய, தெரிவிக்கட்டும், ரோஜ்மல்லன், மரியாதைமிக்க, பூஜ்ய, முறை, மிக்க, நான், நின்று, பெரிய, இன்று, சிறந்த, எழுந்து, விரும்புகிறேன், கொண்டு, வேலைகளை, சமூகத்தின், மரியாதை