வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 144
தலைவனை இழந்த மற்றவை அங்குமிங்கும் சிதறி ஓடிவிட்டன. பந்துலன் நெருங்கிப் பார்க்கும்போது அப்பெரிய மரை தன் ஜீவனை விட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதே இடத்தில் இரண்டு மரைகளுடைய ரத்தத் துளிகளைப் பார்த்த வேடர்கள், அந்த ரத்தத் துளிகளின் தடத்தைப் பின்பற்றிச் சென்றார்கள். சிறிது தூரத்தில் மற்றொரு மரையும் விழுந்து கிடந்ததைக் கண்ட இவர்களுடைய சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. பெரிய வெற்றிக் கொண்டாட்டம் இன்றைய வன போஜனம் இவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தைக் கொடுப்பதாய் இருக்கும்.
சிலர் பெரிய விறகுக் கட்டைகளைப் போட்டு நெருப்பு தயார் செய்தனர். பெண்கள் சமைப்பதற்குப் பாத்திரங்களையெடுத்தனர். வாலிபர்களில் சிலர் மரைகளின் தோலை உரித்து, மாமிசத்தைத் துண்டம் துண்டமாக நறுக்க ஆரம்பித்தனர். முதலிலே நெருப்பிலே சுட்ட ஈரல் துண்டங்களையும், மதுவையும் யாவரும் ருசி பார்க்கத் தொடங்கினர். பந்துலனுடைய இரண்டு கைகளும் மாமிசத்தை நறுக்குவதில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த மல்லிகா சுடப்பட்ட ஈரல் துண்டையும் மதுவையும் தன் கையால் அவனுக்கு ஊட்டினாள். சமையல் இன்னும் பூரணமாக முடியவில்லை. அதற்குள் சூரியன் அஸ்தமித்து விட்டான். ஆனால் ஜோதிமயமாய் எரியும் நெருப்பின் ஒளியிலே யுவ யுவதிகளின் ஆடல் பாடல்கள் ஆரம்பமாயின. குசீனாரா யுவதிகளின் தலைசிறந்த அழகியான மல்லிகா, வேட வேஷத்திலும் தன்னுடைய நாட்டியக் கலையின் நிபுணத்துவத்தைக் காண்பிப்பதிலே வெற்றிபெற்றாள். அகண்ட ஜம்புத்
தீவின் விலைமதிக்க முடியாத இந்த ரத்தினத்தை, அழகின் வடிவத்தை அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ள பந்துலனை, அவனுடைய நண்பர்கள் வாயாரப் புகழ்ந்து போற்றினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 144, பெரிய, புத்தகங்கள், குறி, இரண்டு, பக்கம், அந்த, பின்னே, வால்காவிலிருந்து, மல்லிகா, கங்கை, இடத்தில், பந்துலனுடைய, சிலர், யுவதிகளின், மதுவையும், ஈரல், பார்த்த, ரத்தத், கண்ட, வளைத்துக், மற்றொரு, சிறந்த, கொண்டிருந்தது, மரைகள், அவைகள், சிறிது, நெருங்கி, பந்துலன்