வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 143
“சரி பந்துல்! என்னுடைய மேலங்கியைத் தலைப்பாகையாகச் சுற்றிக் கட்டிவிடு.”
அவளுடைய மேலாடையைத் தலைமீது பாகையாகக் கட்டி விட்ட பந்துல், மார்புக் கச்சையைக் கிழித்துக் கொண்டு வெளிவர முயலும் அவளுடைய திரண்டு நிமிர்ந்திருக்கும் ஸ்தனங்களைக் காட்டி,
“மல்லிகா! உன்னுடைய இந்த ஸ்தனங்கள்?”
“எல்லா மல்ல குமரிகளுக்கும் இவைகள் இருக்கவே செய்கின்றன.”
“ஆயினும், இவை எவ்வளவு சுந்தரமானவை!”
“அதற்கென்ன? யாரும் பறித்துக் கொண்டு போய் விடுவார்களா?”
“இல்லை. வாலிபர்களுடைய திருஷ்டி பட்டுவிடும்!”
“அவர்களுக்குத் தெரியும், இது பந்துல மல்லனுக்குச் சொந்தம் என்று.”
“உனக்கு ஆட்சேபணையில்லையானால் என்னுடைய மேல் துண்டினால் உட்புறத்தில் இறுக்கிக் கட்டி விடுகிறேன்.”
“ஓ! துணிகளுக்கு மேலே பார்த்ததில் உனக்குத் திருப்தி ஏற்படவில்லை.”
புன்முறுவல் பூத்த மல்லிகா, பந்துலனுடைய கன்னங்களிலே முத்தமிட்டாள். மார்புச் சட்டையைக் கழற்றிய பந்துலன், நுனிகள் லேசாகக் கருத்துத் திரண்டு நிமிர்ந்திருந்த அந்த ஸ்தனங்களை மார்போடு சேர்த்துக் கட்டி விட்டான். மல்லிகா தன்னுடைய மார்புச் சட்டையை அணிந்து கொண்டாள்.
“இனிமேல் உனக்குப் பயமில்லையே?”
“மல்லிகா, என்னுடைய பொருளுக்கு எப்பொழுதும் ஆபத்தில்லையென்று எனக்குத் தெரியும். ஆனால், ஓடும்போது இனி அதிகமாக ஆடாதல்லவா?”
இவர்கள் இருவருடைய வருகைக்காகக் காத்திருந்த மற்ற யுவ-யுவதிகள் யாவரும் இப்பொழுது ஒன்றுகூடி விட்டனர். வில், அம்பு, பாலா முதலிய தங்கள் தங்கள் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு தயாராயினர். மத்தியான நேரத்தில் மரைகள் இளைப்பாறும் இடத்தைத் தெரிந்தவன் வழிகாட்ட, அவனுக்குப் பின்னே யாவரும் நடந்தனர். நல்ல உச்சிவேளை, பெரிய விருட்சங்களின் நிழலிலேயே சில மான்கள் கூட்டமாகப் படுத்துத் தலைகளையும் காதுகளையும் ஆட்டிக் கொண்டிருந்தன. அக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் மரை மாத்திரம் நின்றுகொண்டு நாலா பக்கங்களிலும் பார்த்துக்கொண்டும், தன் காதுகளை நிமிர்த்தி சப்தத்தைக் கிரகித்துக் கொண்டும் இருந்தது. அந்தக் கூட்டத்தைப் பார்த்த இவர்கள், இரண்டு பிரிவாகப் பிரிந்தனர். ஒரு பிரிவோர் தங்களின் ஆயுதங்களைத் தயாராய் வைத்துக்
கொண்டு மரங்களின்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 143, கொண்டு, புத்தகங்கள், என்னுடைய, வால்காவிலிருந்து, கங்கை, மல்லிகா, கட்டி, பக்கம், தெரியும், யாவரும், தங்கள், “மல்லிகா, இவர்கள், மார்புச், பந்துல், தன்னுடைய, சிறந்த, கட்டிக், கொண்டாள், அவளுடைய, திரண்டு