வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 120
பெரும்பகுதி ஒரு தனிக்கூட்டமாகவே இருக்கிறது. இன்று அவர்கள் மனிதர்கள் என்பதற்குப் பதிலாக பிரஜைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். என்ன வேடிக்கை! தந்தை ஸ்தானத்தில் இருந்த ஜனசமுதாயம் இன்று ‘பிரஜை’-புத்திர ஸ்தானத்திற்கு வந்துவிட்டது. ஆரிய! இது முற்றிலும் வஞ்சனையல்லவா?”
“மகனே! இன்னுமொரு பெரிய கூட்டத்தை நீ கணக்கிட வில்லையே?”
“ஆம். ஆரியர்களல்லாத பிரஜைகள் அதாவது தொழிலாளி, வியாபாரி, அடிமைகள், ஜன சமூகத்தை ஏமாற்றி, தலைமைப் பதவியிலிருந்தவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு, இந்த வெளி ஜனங்களே துணையாயிருந்தார்கள். தங்களை ஆளும் ஜனங்கள், தங்களைப் போலவே மற்றொருவருக்கு அடிமையாய் இருப்பதைப் பார்த்து, ஆரியர் அல்லாத பிரிவார்களுக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. இதைத்தான் அரசன், எல்லோருக்கும் ஒரே நீதி என்று சொல்கிறான்.”
“குழந்தாய், நீ சொல்வது யாவும் சரியாயிருக்கலாம். ஆனால், இந்த ஆட்சியை யாரிடம் திரும்ப ஒப்புவிப்பது? திருடர்களும் கொள்ளைக் கூட்டத்தார்களுமான தலைமைப் பதவியிலிருப்பவர்களையும், வியாபாரிகளையும் ஒதுக்கி விட்டால், மீதமிருக்கும் ஜன சமூகத்தின் பெரும்பகுதியான ஆரியர்களும் அனாரியர்களும் நிறைந்த அந்தக் கூட்டம் ஆட்சிப் பொறுப்பைச் சமாளித்துவிடுமா? மேலும் மதத் தலைவர்களும், சேனைத் தலைவர்களும் நாம் சிம்மாசனத்தை விட்டவுடனேயே பிரஜைகளை நசுக்கி உறிஞ்சத் தயாராய் இருக்கிறார்கள். குரு பாஞ்சாலத்திலே ஜன சமுதாயத்தின்
கையிலிருந்து ஆட்சி பிடுங்கப்பட்டு, ஏழு தலைமுறைகள்தான் ஆகின்றன. ஆகவே, ஜன ஆட்சியை நாம் இன்னும் முற்றிலும் மறந்துவிடவில்லை! அந்தக் காலத்தில் இந்தப் பிரதேசம் அரசன் திவோதாஸின் ராஜ்யம் என்று அழைக்கப்பட்டதில்லை. பாஞ்சால சமூகத்தின் ஆட்சி என்று அழைக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த ஜன சமூக ஆட்சிக்குத் திரும்பிப் போக எனக்கு வழி தெரியவில்லை மகனே.”
“ஆம். அந்தப் பாதையில் வசிட்டர், விசுவாமித்திரர் போன்ற மலைப்பாம்புகள் வாயைப் பிளந்து கொண்டு உட்கார்ந்திருக்கின்றன”.
நம்முடைய இந்தப் பராதீனமான நிலைமையை உணர்வதால் நாம் காலத்தை மாற்ற முடியாது. இன்னும் நாளை எங்கு போய்ச் சேரப் போகிறோம் என்பதும் நமக்கு தெரியாது. சுதாஸனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றெடுத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு காலத்தில் வாலிபனாக இருந்தவன்தான். அந்தக் காலத்தில் வசிட்டர், விசுவாமித்திரருடைய கவிதைகளும், பிரஜைகளின் புத்தியை மயக்கும் அவர்களுடைய மதச் சடங்கு மாயாஜாலங்களும் இவ்வளவு தூரம் பரவியிருக்கவில்லை. அரசன் தனது
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 120, புத்தகங்கள், இன்று, நாம், பக்கம், அரசன், அந்தக், காலத்தில், கங்கை, வால்காவிலிருந்து, தலைவர்களும், வசிட்டர், இன்னும், ஆட்சி, இந்தப், தலைமைப், இரண்டு, அழைக்கப்படுகிறார்கள், சிறந்த, பிரஜைகள், முற்றிலும், ஆட்சியை, “ஆம், சமூகத்தின்