வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 114
ஜேதாவுக்குத் தெரியும். சுதாஸ் மத்ரபுரியிலே தங்கிவிடச் சம்மதித்தால் ஜேதாவும் அவர்கள் உறவை விரும்பவே செய்தான். ஆனால் சுதாஸ் அடிக்கடியில்லாவிட்டாலுங் கூட தன்னுடைய தாய் தந்தையரை நினைத்து உருகிப் போவான். சுதாஸ் அவனுடைய மாதா-பிதாவுக்கு ஒரே புத்திரன் என்று ஜேதாவுக்கும் தெரியும்.
ஒருநாள் அபாலாவும் சுதாவும் காதலர்களை வரவேற்கும் சந்திரபாகா நதிக்குக் குளிக்கச் சென்றனர். அபாலாவின் இளமையெழில் பொங்கும் சரீரத்தை எத்தனையோ முறை குளிக்கும்போது நிர்வாணமாக சுதாஸ் பார்த்திருக்கிறான். ஆனால் இன்று நிர்வாணமாக நீந்திக் கொண்டிருந்த அநேக அழகிகளுக்கு மத்தியிலே அபாலாவைப் பார்த்தபொழுதுதான், அவளுடைய ஒப்பற்ற சௌந்தர்யத்தின் பூரணத்துவம் அவனுக்குத் தெரிந்தது. நீந்தி முடிந்து இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர். சுதாஸ் மௌனமாக வருவதைப் பார்த்த அபாலா அவனுடன் வார்த்தையாட ஆரம்பித்தாள்.
“சுதாஸ்! நீ வாய் திறக்கவே இல்லையே. களைத்துப் போய் விட்டாயா? சந்திரபாகாவின் வெள்ளத்தை இரண்டு முறை நீந்திக் கடப்பதென்றால் அது என்ன சுலபமான உழைப்பா?”
“நீயும் என்னுடன் கூட நீந்தவில்லையா என்ன? நேரம் இருந்தால் இருமுறையல்ல. இருபது தடவைகூட நீந்திக் கடக்க முடியும்.”
“கரையேறியதும் நான் உன்னைப் பார்த்தேன். உன்னுடைய மார்பு எவ்வளவு விரிந்திருந்தது! உன்னுடைய தோளிலும், தொடைகளிலும் சதைகள்
விம்மியிருந்தன.”
“நீந்துவது பெரிய தேகப்பயிற்சி. அது உடலை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்ல. அழகு பெறவும் செய்கிறது. ஆனால் உன்னுடைய அழகு இதற்கு மேல் எங்கே வளர முடியும்? அபாலா, நீ மூன்று லோகத்திலும் ஈடு இணையற்ற அழகின் வடிவம்.”
“உன்னுடைய கண்களுக்குத்தானே, சுதாஸ்?”
“ஆனால் அவைகள் மோகத்தில் மூழ்கியிருக்கவில்லை என்பது உனக்குத் தெரியும்.”
“ஆம்! மத்ரகுல யுவதிகள் தாராளமாக வழங்குவார்கள் என்பது உனக்குத் தெரிந்திருந்தும், நீ என்னிடம் ஒரு முத்தம் கூடக் கேட்டதில்லை.”
“நான் கேட்காமலேயே, நீ ஏராளமாக வழங்கியிருக்கிறாயே!”
“ஆனால், அப்பொழுதெல்லாம் உன்னிடத்தில் என் சகோதரன் சுவேதாஸ்வனையே நான் பார்த்தேன்.”
“இப்பொழுது கொடுக்க மாட்டாயா?”
“கேட்டுமா முத்தம் கிடைக்காது?”
“ஆனால், கேட்டால் நீ என்னுடைய.....”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 114, சுதாஸ், புத்தகங்கள், பக்கம், உன்னுடைய, “ஆனால், தெரியும், நீந்திக், கங்கை, வால்காவிலிருந்து, அழகு, பார்த்தேன், என்பது, முத்தம், உனக்குத், நான், முடியும், முறை, அபாலாவும், நிர்வாணமாக, சிறந்த, என்ன, அபாலா, இருவரும்