வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 113
வேறு பக்கம் திருப்பக் கருதி,
“பாஞ்சால அரசர் தங்களிடம் குதிரைகள் வாங்கினாரா?”
“ஆம் வாங்கினார். வாங்கிய குதிரைகளுக்கு நல்ல விலையும் கொடுத்தார். எவ்வளவு கொடுத்தார் என்பது ஞாபகமில்லை. ஆனால் அவருக்கு முன்னால் பாஞ்சால சமூகத்தைச் சேர்ந்த ஆரியர்களும் மண்டியிட்டு வணங்கியதையும், நடுநடுங்கிக் கை கட்டி நிற்பதையும் பார்த்த என் உடம்பு பற்றி எரிந்தது. உயிர் போவதானாலும் சரி, ஒரு மத்ரன் அவ்விதம் செய்யவே மாட்டான்.”
“நீங்கள் அவ்விதம் செய்ய வேண்டியது ஏற்படவில்லையே?”
“அவ்விதம் வணங்கும்படிக் கூறியிருந்தால் நான் கலகமே செய்திருப்பேன். கிழக்குப் பிரதேச அரசர் எங்களை அவ்விதம் சொல்வதில்லை. இது பழங்காலத்திலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வரும் முறைமை.”
“ஏன்?”
“ஏன் என்றா கேட்கிறாய்? இதனுடைய கதை மிகவும் பெரியது. மேற்கிலிருந்து விஸ்தரித்துக் கொண்டே வந்த பாஞ்சால சமுதாயம், யமுனா, கங்கை, இமயமலையின் மத்திய பிரதேசம் முதலிய இடங்களில் வசிக்க ஆரம்பித்த போது அவர்களும் மத்ரர்களைப் போலவே ஒரே சமுதாயமாக வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஆனால் நாளடைவில் அசுரர்களுடைய கூட்டுறவால் பாஞ்சால ஆரியர்களிடையேயும் சிலருக்குச் சேனாதிபதிகளாகவும்,
அரசர்களாகவும், புரோகிதர்களாகவும் ஆக வேண்டுமென்ற ஆசை தோன்றிற்று.”
“அவர்களுக்கு இவ்வித இச்சை ஏன் உண்டாயிற்று?”
“பேராசையால், தான் உழைக்காமல் பிறருடைய உழைப்பிலே சாப்பிட வேண்டுமென்ற எண்ணத்தால். இந்த அரசர்களும் புரோகிதர்களுமே பாஞ்சாலத்தில் உயர்வு தாழ்வுப் பாகுபாட்டை ஏற்படுத்தினார்கள். அங்கிருந்து மனிதத்தன்மையையும் விரட்டிவிட்டார்கள்.”
2
மத்ரபுரியில் (சியால்கோட்) ஜேதாவினுடைய குடும்பத்திற்கு சுதாஸ் வந்து நான்கு வருஷங்கள் முடிந்துவிட்டன. ஜேதாவினுடைய மனைவி இறந்து போய்விட்டாள்; ஜேதாவினுடைய விவாகமான சகோதரிகளில் அல்லது பெண் மக்களில் ஒருவர் இருவர் இவன் குடும்பத்தில் இருந்து வருவது வழக்கம். ஆனால், நிரந்தரமாய் அந்தக் குடும்பத்தில் வசிப்பவர்கள் ஜேதா, அபாலா, சுதாஸ் இம்மூவருந்தான். அபாலாவுக்கு இப்பொழுது இருபது வயது. அபாலா, சுதாஸ் இவர்கள் இருவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது இவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்களென்பதைத் தெரிந்து கொள்ளலாம்; அபாலா மத்ர புரியின் சிறந்த அழகிகளிலே ஒருவளாக எண்ணப்படுபவள். அவளுக்கு ஏற்ற அழகிய யுவர்களுக்கும் அங்கு பஞ்சமில்லை. அதேபோல், சுதாஸைப் போன்ற சுந்தர வாலிபர்களுக்குத் தகுந்த அழகிய யுவதிகளுக்கும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 113, புத்தகங்கள், கங்கை, பக்கம், ஜேதாவினுடைய, சுதாஸ், அபாலா, பாஞ்சால, அவ்விதம், வால்காவிலிருந்து, சிறந்த, இவர்கள், அழகிய, “ஏன், குடும்பத்தில், அரசர், கொடுத்தார், வேண்டுமென்ற