வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 112
“ஆம்; அங்கு வந்தேறும் குடிகள் அதிகம்.”
“குழந்தாய்! அவர்கள் வந்து குடியேறியவர்களல்ல; பூர்வீகக் குடிகள். அங்குள்ள வியாபாரிகள், தொழிலாளிகள், அடிமைகள் முதலியவர்கள் ஆரியர்கள் பிரவேசிப்பதற்கு முன்பே, அங்கு வசித்துவரும் பூர்வீகக் குடிகள். அவர்களுடைய முகங்களையும் நிறத்தையும் நீ பார்க்கவில்லையா?”
“ஆம்; பார்த்திருக்கிறேன். அவர்களுடைய உடம்பு பாஞ்சாலர்களைப் போலல்லாமல் கறுப்பாகவோ அல்லது தாமிர வண்ணமாகவோ இருக்கிறது.”
“சரி, பாஞ்சாலர்கள் எங்கள் மத்ரர்களைப் போல் இவ்வளவு சிவப்பாயிருக்கிறார்களா?”
“இவ்வளவில்லை! ஆனால் பெரும் பகுதி.”
“ஆம்; எங்களை அடுத்துதான். ஏனெனில் மற்றொரு நிறத்தவரோடு கலப்பதால் நிறத்தில் மாற்றம் ஏற்படவே செய்கிறது. மத்ரர்களைப் போல செம்பட்டை மயிருடைய ஆரியர்களே அங்கு வசித்தால் அங்கு மனிதத் தன்மையைப் பார்க்க முடியும். ஆரியர்களுக்கும் ஆரியரல்லாதாருக்கும் உயர்வு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்கு இந்த நிறக் கலப்பே காரணம் என்று நான் நினைக்கிறேன்.”
“நம் முன்னோர்களால் ‘அசுரர்கள்’ என்று அழைக்கப்பட்ட இந்த
ஆரியரல்லாதாரிடையே, அடிமை-எஜமானன் என்ற பழக்கம் இருந்து வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?”
”ஆம்; ஆனால் பாஞ்சால, சமுதாயம் ஆரிய ஜாதியைச் சேர்ந்தது; ஒரே ரத்தத்தில் தோன்றியது. ஆயினும் அவர்களிடையிலும் உயர்வு-தாழ்வு மனப்பான்மை இப்போது காணப்படுகிறதல்லவா? பாஞ்சால தேசத்து அரசர் திவோதாஸ் என்னிடம் சில குதிரைகளை வாங்கினார். இதற்காக ஒருநாள் அவர் முன்னிலையில் சென்றேன். அவருடைய இளமையான திடகாத்திர சரீரம் மிக அழகாயிருந்தது. ஆனால் அவருடைய தலையின் மீது மஞ்சளும் சிவப்பு நிறமும் கலந்த பெரிய கனத்த கூடை (மகுடம்) யைக் கவிழ்த்திருந்தார். அவருடைய காதுகளிலே துளையிடப் பட்டு இரண்டு உருண்டைகளைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார். இன்னும் கரங்களிலும் கழுத்திலும் என்னென்னவோ வேடிக்கைகள். இவைகளை எல்லாம் பார்த்த எனக்கு அவர் மீது இரக்கம் உண்டாயிற்று. பாவம், பூரணச் சந்திரனை ராகு விழுங்கியதைப் போல் எனக்குத் தோன்றியது. அவருடன் அவரது மனைவியும் அமர்ந்திருந்தாள். எங்கள் மத்ரக் குலத்து எந்த அழகிக்கும் குறைந்தவளல்ல அவள். பாவம், அவளும் அந்தச் சிவப்பு மஞ்சள் சுமையைத் தாங்கமுடியாமல் வளைந்து போயிருந்தாள்.”
இந்த வார்த்தைகளைக் கேட்ட சுதாஸினுடைய இதயம் படபடவென அடிக்க ஆரம்பித்தது. தன்னுடைய இதய உணர்ச்சி முகத்தில் தோன்றாமலிருக்க
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 112, புத்தகங்கள், அங்கு, கங்கை, பக்கம், அவருடைய, “ஆம், குடிகள், பாஞ்சாலர்கள், வால்காவிலிருந்து, தோன்றியது, பாஞ்சால, அவர், பாவம், மீது, மனப்பான்மை, சிவப்பு, எங்கள், பூர்வீகக், சிறந்த, அவர்களுடைய, மத்ரர்களைப், உயர்வு, போல், தாழ்வு