ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Rueraddy
n. தோட்கோப்புக் கயிறு.
Rufescent
a. (வில) சற்றுச் சிவப்பான.
Ruff
-1 n. விறைப்புக்கொசகமுடைய முற்கால அகலக் கழுத்துப்பட்டை, பறவைகளின் கழுத்திற்கு வளையம், பறவைகளின் வண்ணக் கழுத்துவளையம், வளர்ப்புப்புறா வகை.
Ruff
-2 n. உள்ளான் குருவியினப் பறவைவகை.
Ruff
-3 n. சிறு நன்னீர் மீன்வகை.
Ruff
-4 n. துருப்புச்சீட்டு, துருப்புச்சீட்டாட்டம், துருப்புச்சீடடு வாய்ப்பு மாறி மாறிவரும் பழைய சீட்டாட்டவகை, (வினை) சீட்டாட்டத்தில் துருப்புச்சீட்டாடு.
Ruffed
a. விறைப்புக்கொசுவக் கழுத்துப்பட்டையணிந்த, வண்ணக்கழுத்து வளையமுடைய, கழுத்திற்கு வளையமுடைய.
Ruffle
n. உலைவு, அமைதிகுலைவு, மயிர்கலைவு, திரைவுகோள், இறகு உணளர்வு, நீர் அலைவு, ஆடை ஓரக்குஞ்சம், பறவைகளின் கழுத்துப்பட்டை, (படை) முரசதிர்வு, குழப்பம், கலைசல், (வினை) உலைவுறுத்து, அமைதிகுலை, இறகு உளர்வி, நீர்ப்பரப்பமைதிகெடு, ஆளின் பண்பு வகையில் குலையச்செய், மெல்லிழைவு இழ, அமைதி இழு, தருக்கித்திரி, சண்டை வளர்த்துக்கொண்டு சுற்றித்திரி.
Rufous
a. (வில.,தாவ) செம்பழுப்பான.
Rug
n. முரட்டுக் கம்பளம், கம்பள விரிப்பு, தரைவிரிப்பு.
Rugbeian
n. ரக்பி பள்ளி, ரக்பி பள்ளி உறப்பினர், (பெயரடை) ரக்பி பள்ளியைச் சார்ந்த.
Rugby
n. ரக்பி காற்பந்தாட்டம், ஆடுவோர் பந்தினைத் தூக்கிச் செல்லக்கூடிய காற்பந்தாட்டம்.
Rugged
a. கரடுமுரடான, சொரசொரப்பான, மென்மையாக்கப்படாத, மெருகூட்டப்படாத, பணிவிணக்கம் அற்ற, திருத்தம் இல்லாத, கரகரப்பான ஒலியுடைய, கடுமையான, வளைந்துகொடுக்காத, கடுகடுப்பான, கரம் உழைப்பினை உட்கொண்ட.
Rugose, rugous
(தாவ) சுருக்கங்கள் கொண்ட, சுரள் மடிப்புக்கள் வாய்ந்த, திரைந்த.
Ruin
n. முழுக்கேடு, பாடழிவு, படுவீழ்ச்சி, பாழ்நிலை, அழிபாடு, பட்டிடம்-நகரம் முதலியவற்றின் சீர்குலைந்த நிலை, தகர்வு, பொருளக நொடிப்பு, செல்வநிலை அழிவு,. பொருளாதார வீழ்ச்சி, முழுச்சொத்திழப்பு, கற்பழிவு, அழிவுக்காரணம்,. தீங்கிற்கு வழிவகுப்பது, (வினை) பாழ்படுத்து, பாழ்நிலையடை, படுவீழ்ச்சியுறு.
Ruinous
a. சீரழிவான, அழிந்த லையிலுள்ள,சிதைந்த தன்மையிலுள்ள, அழிவுண்டாக்குகிற, கேடுபயக்கிற.
Ruins
n. pl. இடிபாடுகள், எஞ்சிய அழிபாடுகள், அழிவு நிலையிலுள்ள கட்டிடப்பகுதிகள், அழிவுநிலையிலுள்ள நகரப் பகுதிகள்.
Rule
n. விதி, ஒழுங்கு முறைமை, நியதி, ஒழுங்கமைதி, மரபொழுங்கு, வழக்கமுறை, நடைமுறை ஒழுங்கு, இயல்அமைதி, பொதுநியதி, கட்டளைவிதி, வகுத்துரைக்கப்பட்ட, விதிமுறை, திருந்திய ஒழுங்டகுநிலை, வழிகாட்டுந் தத்துவம், மேற்கோள் வரி, வகைமுறை, நடைமுறைவிதி, நடைமுறை ஆட்சி, பொதுநிலை வழக்காறு, நீதி, ஒழுக்கவிதி, கோட்பாடு, சட்டம், கட்டுப்பாட்டெடாழுங்கு, சமயக்கட்டுப்பாட்டு விதிமுறைத்தொகுதி, ஆட்சி,. அரசாட்சி, ஆட்சியுரிமை, கட்டளை முடிவு, நீதிமன்ற ஆணை, அளவுகோல், நேர்வரி, கொத்தரின் தளமட்டத் தகட்டுக்கோல், (அச்சு) இடைவரித்தகடு, வரையச்சுப்பாளம், அச்சில் அவாய்நிலைக் குறிப்புக்கோடு, அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக் கோடு, கைதிகள் தனி ஒதுக்கிட வாழ்வுரிமை,. (வினை) ஆளு,. ஆட்சி செலுத்து, மேரலாளராயமை, மேலாண்மை செலுத்து, கட்டுப்படுத்தி நடத்து, அடக்கி ஆளு, அறிவுரைல கூறி மேலோங்கியிரு, விலைகள் வகையில் குறிப்பிட்ட படித்தரம் உடையதாயிரு, பண்டங்கள் வகையில் பொதுவான படிநிலையுடையதாயிரு, மன்றத்தில் தீர்வு வழங்கு, செய்தி வகையில் அதிகார தீர்ப்புக் கொடு, வரைதடி கொண்டு நேர் கோடு வரை, தாளில் இணைவரிகள் இடு.
Rule-joint
n. மடக்குவரை அளவுகோல்.
Ruleless
a. முறையற்ற, ஒழுங்கற்ற, விதிமுறைகள் இல்லாத, அடங்காத.