சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு

வஞ்சி மாநகரின் சிறப்பு
கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க் கழுநீர் மேய்ந்த கயவா யெருமை பைங்கறி நிவந்த பலவி னீழல் மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக் |
45 |
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங் குடபுலங் காவலர் மருமா னொன்னார் வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண் வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று |
50 |
கொழுத்த மீன்கள் காயப்படும்படி எருமை சேற்றில் நடக்கும் அங்குள்ள வளமான இதழ்களைக் கொண்ட கழுநீர்ப் பூக்களைத் தன் வலிமை மிக்க வாயால் மேயும். பின் படுத்துக் கொள்ள பலாமர நிழலுக்குச் செல்லும். பலா மரத்தில் மிளகுக் கொடி ஏறியிருக்கும். பின் அசை போட்டுக்கொண்டே மஞ்சள் இலை தன் உடலைத் தடவிக் கொடுக்கும்படி மஞ்சள் வயலில் படுத்திருக்கும். அப்போது அசை போனும். அதன் வாயில் கழுநீர்ப் பூவிலிருக்கும் விளையாத இளங்கள் நறுமணம் வீசும். அதன் பின்னர் எழுந்து போய் மீண்டும் அசை போட்டுக்கொண்டே குளவிப் பூப் படுக்கையில் படுத்துக் கொள்ளும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில் பொறித்தது இது குடபுலத்தின் வளம். அதனைக் காக்கும் மரபில் வந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் தன் பகைவர்களை அடக்கி அவர்களது வடநாட்டு எல்லையிலிருக்கும் இமய மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான். அந்தக் குட்டுவனின் தோள் கோட்டைக் கதவுக்குத் தாழ்ப்பாள் போடும் கணையமரம் போன்றது. அவன் பெரும்பாலும் தேரில் செல்லும் பழக்கம் உடையவன். இவனது சேரநாட்டு வஞ்சி வளம் மிக்க ஊர். அந்த வஞ்சி நகரமே ஏழை-நகரம்எ என்று எண்ணும்படியாக நல்லியக்கோடன் பொருள் வளத்தை வாரி வழங்குவான்.
தமிழ் நிலை பெற்ற மதுரையின் மாண்பு
நறவுவா யுறைக்கும் நாகுமுதிர் நுணவத் தறைவாய்த் குறுந்துணி யயிலுளி பொருத கைபுனை செப்பங் கடைந்த மார்பிற் செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த |
55 |
மகாஅ ரன்ன மந்தி மடவோர் நகாஅ ரன்ன நளிநீர் முத்தம் வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித் தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பி னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற |
60 |
கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந் தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான் தென்புலங் காவலர் மருமா னொன்னார் மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக் கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் |
65 |
தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று |
உமணர் உப்பு விற்கச் செல்லும் வரிசையோடு அவர்களின் உமட்டியரும் குழந்தைகளும் செல்வர். வழியில் மந்தி குழந்தைகளுடன் சேர்ந்து கிலிகிலுப்பை விளையாடும். உமணர் - தாங்கி இழுக்கும் காளை மாடுகள் பூட்டிய வண்டியை உமணர்கள் ஓட்டிச் செல்வர். தலையில் அணியும் மாலை கண்ணி எனப்படும். நுணாக் கட்டையைக் கடைந்து செய்த கண்ணியை அவர்கள் தம் காதுகளைத் தொடும் வகையில் தலையின் மேல் அணிந்திருப்பர். மார்பிலும் அணிந்திருப்பர். முதிர்ந்த நுணாமரப் பொந்துகளில் தேன் கூடு கட்டும். நிறைமதி நாளிலும், மறைமதி நாளிலும் தேனீக்கள் தாம் சேர்த்த தேனைப் பருகிவிடும். அவ்வாறு பருகியபின் கடையப் பயன் படுத்தப்படும் நுணா மரக்கிளை வெட்டப்படும் அது இளமையும் முதுமையும் கொண்ட பதமான நுணாமரத் துண்டு. அதில்தான் நுணாக்கட்டை-மாலைக்கு வேண்டிய துண்டுகளைக் கடைந்தெடுப்பார்கள். உமணர் மக்கள் - அவர்களது மக்களை ஒத்த மந்திகள் சிறுவர்கள் விளையாடும் கிலுகிலுப்பையை எடுத்துத் தாமும் அவர்களைப் போலவே ஆட்டி விளையாடும். உமட்டியர் - உமட்டியர் முத்துப் போன்ற பற்களுடன் நகைமுகம் காட்டுவர். தம் குழந்தைகளைத் தம் தோளில் கட்டியிருக்கும் தூக்குத் துணியில் தம் வயிற்றுப் பகுதியில் உட்கார வைத்துக் கொள்வர். மந்தி ஆட்டும் தனது கிலுகிலுப்பையை வாங்கித் தரும்படி குழந்தை அழுதால் குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்து கிலுகிலுப்பையை மறைத்து மறக்கும்படி செய்வர். குழந்தையைத் தோளில் மறைக்கும்போது அவர்களின் தலையிலுள்ள ஐம்பால் ஒப்பனைதான் கண்ணைக் கவரும். குழந்தை பிறந்து சில நாள்களேயான புனிற்றிளம் பெண்களேயாயினும் அவர்களது வயிறு வற்றி இடை சிறுத்துப் போய்தான் இருக்கும். இவர்கள் வாழுமிடம் கடலலை மோதும் கொற்கை நகரம். - ( உமணர் – ஒப்புநோக்குக – பெரும்பாணாற்றுப்படை அடி 46 – 65 ) கொற்கை - கொற்கையைத் துறைமுகமாகவும், மதுரையைத் தலைநகரமாகவும் கொண்டு ஆள்பவன் செழியன். தமிழகத்தின் தென்பகுதியில் இருப்பதாலோ, இனிய புலமாக இருப்பதாலோ அவனுடைய நாடு தென்புலம் என்று பெயர் பெற்றிருந்தது. அந்தத் தென்புலத்தைக் காப்பாற்றும் உரிமை பூண்டவர்களின் வழி வந்தவன் செழியன். அவன் தன் பகைவர்களின் நிலத்தைப் பொருள் வளத்தில் மாறுபடுமாறு செய்தவன். தன் நாட்டுக்கு நிழல் தரும் காவல் வெண்குடையின் கீழ் வீற்றிருப்பான். கண்ணைப் போன்ற வேப்பிலைக் கண்ணியைத் தலையில் சூடிக்கொண்டு தேரில் வருவான். தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது. மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்.
உறந்தையின் சிறப்பு
நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை ஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற் |
70 |
கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின் வருமுலை யன்ன வண்முகை யுடைந்து திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை |
75 |
யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து காமரு தும்பி காமரஞ் செப்புந் தண்பணை தழீஇய தளரா இருக்கைக் குணபுலங் காவலர் மருமா னொன்னா ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந். |
80 |
தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று |
உறையூரில் உண்ணத்தக்க நல்ல நீரைக் கொண்ட பொய்கை. அதன் கரையில் நீர்ப்பக்கமாக விரிந்த கடம்பு மரம். அம் மரத்தில் நிறைந்த மாலைகள் தொங்குவது போன்று பூத்திருக்கும் பூக்கள். அந்தப் பூக்கள் நீரில் உதிர்ந்தன. உண்ணும் நீரில் அவை மிதப்பதால் குளமே ஓவியம் போலக் காட்சி அள்ளித்தது. தரையில் மேயும் தம்பலப்பூச்சிகள் (கோவம்) போல நீரில் மிதக்கும் கடப்பம்பூக்கள் காற்றலையில் நகர்ந்துகொண்டிருந்தன. அதில் மகளிரின் முலை போலத் தாமரை மொட்டுகள் வெளிவந்து பூத்தன. அவை தெய்வ வழிபாட்டுக்கு மட்டும் பயன்படும் தெய்வத்தாமரைப் பூக்கள். அவற்றில் பூவின் நடுவில் இருக்கும் கொட்டைகள். மகளிர் தம் மாசுமருவற்ற கைகளில் மருதாணி வைத்துச் செந்நிறம் ஆக்கிக்கொண்டது போல தாமரை இதழ்களுக்கு இடையே பொதிந்திருக்கும் செம்பொன் நிறம் கொண்ட கொட்டை. அந்தக் கொட்டையில் உறங்கும் ஆண் பெண் வண்டுகள் காம இன்பத்தில் காமரப்பண் பாடின. இப்படிப்பட்ட குளநீர் பாயும் வளவயல்களைக் (பணை) கொண்டதுதான் உறையூர். இந்த நாடு குணபுலம் எனப்பட்டது. இதனை மரபுரிமையில் ஆண்டுவந்தவன் செம்பியன். தேரில் செல்லும் பழக்கமுடைய இவன் ‘நற்றேர் செம்பியன்’ எனப் போற்றப்பட்டான். இவன் தூங்கெயில் கோட்டையை வென்று அதன் அடையாளமாகத் தன் கையில் காப்புத்தொடி அணிந்துகொண்டான். அந்தத் தூங்கெயில் ஓங்கி உயர்ந்த கதவினைக் கொண்டது. மேகம் அந்தத் தொங்கும் கோட்டையில் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும் அளவுக்கு அந்தக் வானளாவ உயர்ந்து தொங்கியது. அதனைக் கைப்பற்றிக்கொண்ட செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப்படுத்தும் புலவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, கொண்ட, இலக்கியங்கள், உமணர், செல்லும், தேரில், அந்தத், வழங்குவான், செழியன், விளையாடும், அந்தக், அவர்களது, கிலுகிலுப்பையை, தோளில், சிறுபாணாற்றுப்படை, நகரமே, இருக்கும், அவன், இவனது, நீரில், வஞ்சி, தமிழ், மந்தி, காவலர், மருமா, பத்துப்பாட்டு, தாமரை, வறிதே, பூக்கள், தன்ன, செல்வர், அவர்களின், தலையில், அணிந்திருப்பர், நாளிலும், கொற்கை, கொண்டது, உறையூர், இவன், தூங்கெயில், மதுரை, நாடு, குழந்தை, குழந்தையைத், இருப்பதாலோ, உமட்டியர், நல்லியக்கோடன், மேயும், மிக்க, பின், படுத்துக், மரத்தில், கழுநீர்ப், யதாஅன்று, சிறப்பு, சங்க, நிவந்த, குளவிப், னொன்னார், போட்டுக்கொண்டே, மஞ்சள், வாரி, வளத்தை, பெற்ற, கண்ணி, ரன்ன, பொருள், எண்ணும்படியாக, நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன், வளம், அதனைக், வந்தவன், மாலை