பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு

காடுறை தெய்வத்திற்குக் கடன் கழித்தல்
பாடின பாணிக் கேற்ப நாடொறும் களிறு வழங்கதர்க் கானத் தல்கி இலைஇல் மராஅத்த எவ்வந் தாங்கி |
50 |
வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற் காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப் |
பரிசு பெற்றோன் பெறாதோனை விளித்தல்
பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றாள் முரசுமுழங்கு தானை மூவருங் கூடி அரசவை யிருந்த தோற்றம் போலப் |
55 |
பாடல் பற்றிய பயனுடை எழாஅற் கோடியர் தலைவ கொண்ட தறிந |
எழாஅல் தலைவ, கோடியல் தலைவ, புகழ் மேம்படுந, ஏழின் கிழவ என்றெல்லாம் பொருநனை விளித்து அவனை ஆற்றுப்படுத்தும் புலவர் சொல்லத் தொடங்குகிறார். வழியில் கடவுட் கடன் புலவரும் பொருநர் கூட்டமும் நிழலைத் தேடிச் சென்றனர். நாள்தோறும் யானைகள் நடமாடும் காடு அது. பாடினி பாட்டுப் பாடினாள். அப் பாட்டிசைக்கு ஏற்பவும், யாழிசைக்கு ஏற்பவும் காட்டு வழியில் யானைகள் நடைபோட்டுக் கொண்டு கேட்டுக் கொண்டே வந்தன. யானையின் நிழலில் அல்கி அவர்கள் இளைப்பாறுவதும் உண்டு. கானத்தில் இலை உதிர்ந்த மராம் மரங்கள் இருந்தன. அம் மரங்களால் கிடைத்த நிழல் வலைவிரிப்பின்கீழ்க் கிடைக்கும் நிழல்போல் இருந்தது. வெயிலின் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு சென்ற அவர்கள் அந்த அருநிழலில் தங்கி இளைப்பாறினர். அங்கே கடவுளுக்கு அமைத்த கற்கோயில் இருந்தது. (மராமர நிழல் என்பதால் அது மலைக்கடவுள் முருகன் கோயிலாக இருக்கலாம்) அங்கே தம் இசையை எழுப்பி அந்தக் கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து முடித்தனர். கோடியர் தலைவ, கேள் மூவேந்தர் தம் பெருமை மிக்க செல்வத்தால் பெரும்பெயர் பெற்று, எதையும் தாங்கும் இதயத்தோடு முயற்சி மேற்கொண்டு ஒழுகுபவர்கள் அத்தகைய மூவேந்தரும் ஒன்று கூடியிருக்கும்போது அவர்களது படையானது முரசை முழக்கும்போது எழுச்சி மிக்க இசை எழும்புவது போல, பொருநர் தம் எழால் முரசை முழக்கியும், யாழை மீட்டியும் பாடிக்கொண்டு கோடியல் தலைவனோடு பொருநர் கூட்டம் அக் கடவுள் கோட்டத்தில் தங்கியிருந்தது. புலவர் அந்தக் கோடியர் தலைவனை (யாழோர் கூட்டத்துத் தலைவனை), (பொருநனை) விளித்துச் சொல்லத் தொடங்கினார்.
அறியா மையி னெறிதிரிந் தொராஅ தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந |
60 |
பரிசு பெற்றோன் பாடின முறை
ஆடுபசி யுழந்தநின் இரும்பே ரொக்கலொடு நீடுபசி யொராஅல் வேண்டி னீடின் றெழுமதி வாழி ஏழின் கிழவ |
கோடியல் தலைவ நீ நின் குறிக்கோளை அறிந்தவனாயினும் எங்கு யாரிடம் செல்ல வேண்டும் என்று நினைத்துப் பார்க்காமல் கால் போன வழியில் சென்று கொண்டிருப்பது நீ முன்பு நோற்ற நோன்பின் பயனாகும். என்றாலும் நான் சொல்வதைப் போற்றிக் கேட்பாயாக ! உன் சுற்றத்தார் அடித்துத் தின்னும் பசியால் வருந்துகின்றனர். அந்த நீண்ட நாள் பசியைப் போக்க விரும்பினால் காலம் தாழ்த்தாமல் நான் சொல்லும் இடத்திற்குச் செல்ல எழுக ! வாழ்க!
பழுமர முள்ளிய பறவையின் யானுமவன் இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் |
65 |
நசையுநர்த் தடையா நன்பெரு வாயில் இசையேன் புக்கென் இடும்பை தீர எய்த்த மெய்யே னெய்யே னாகிப் பைத்த பாம்பின் துத்தி யேய்ப்பக் கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி |
70 |
இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர் |
யானும் அன்று ஒருநாள் ( கரிகாற் பெருவளத்தான் ) அரணமனை வாயிலுக்குள் நுழைந்து சென்று வெள்ளி முளைக்கும் விடியல் வேளையில் என் தடாரிப் பறையை முழக்கி ஒன்றே ஒன்று சொல்லத் தொடங்கிய போதே அவன் என்னைப் பேணத் தொடங்கி விட்டான். அன்று நான் பழுத்த மரத்தை நினைத்துக் கொண்டு பறந்து செல்லும் பறவை அவனது அரண்மனையில் இழும் என்னும் சும்மை. அதாவது அமைதி ஒலி. . அவனது அரண்மனையின் பெருவாயிலில் அவனை விரும்பிப் பார்க்கச் செல்வோரைத் தடுக்கும் வழக்கம் இல்லை. உள்ளே நுழையும் போது நான் எந்த இசையையும் எழுப்பவில்லை. என் உடம்பு இளைத்திருந்தது. உள்ளம் சோர்ந்து போயிருந்தது. எனினும் என் இடும்பை தீர வேண்டுமே! தடாரி என்னும் குடுகுடுப்பையை அடித்தேன். படமெடுத்தாடும் பாம்பைப் பிடித்திருப்பது போல் தடாரியைப் பிடித்துக் கொண்டு ஆட்டினேன். பாம்பு நாக்கைப்போல் அதில் இருந்த அரக்குமுடித் துத்தியானது தடாரியை அடிக்க அது ஒலித்தது. அதன் இருபுறக் கண்ணிலும் மோதி அது பாணி இசையைத் தந்தது.
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் ஓன்றியான் பெட்டா அளவையி னொன்றிய |
அரசன் விருந்தோம்பலின் சிறப்பு
கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறிக் |
75 |
கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப் பருகு அன்ன அருகா நோக்கமொடு உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ ஈரும் பேனும் இருந்திறை கூடி வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த |
80 |
துன்னற் சிதாஅர் துவர நீக்கி |
அவன் எனக்கு உறவினன் அல்லன். என்றாலும் என்னை உறவு கொள்வதற்காக விரும்பி வந்தான். கொடை நல்கி உதவி செய்வதற்கென்று அரண்மனையில் தனி இடம் இருக்கும். அதற்கு வேளாண் வாயில் என்று பெயர். அந்த வேளாண் வாயிலுக்கு வந்து எங்களை வரவேற்றுப் பலர் முன்னிலையில் பலரும் விரும்புமாறு எங்களைத் தன் நண்பர்கள் என்று கூறிக்கொண்டான். பலரும் காணுமாறு தான் விரும்பிய இடத்தில் எங்களை இருக்கச் செய்தான். சற்றும் குறையாத ஆசையோடு எங்களை விழுங்கிவிடுவது போல் பார்த்தான். எங்களது துணிமணிகளில் ஈரும் பேனும் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்தன. வியர்வையால் நனைந்ததைத் துவைத்து உடுத்தாமையால் விளைந்த பலன் இது. கிழிந்துபோயிருந்த அதனையும் வேறு நூல்கொண்டு தைத்து உடுத்தியிருந்தோம். புத்தாடை நல்கிப் பழைய ஆடைகளை முற்றிலுமாகக் களையச்செய்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு, தலைவ, கொண்டு, நான், இலக்கியங்கள், கோடியல், வாயில், வழியில், பொருநர், அந்த, பொருநராற்றுப்படை, சொல்லத், எங்களை, வேளாண், பத்துப்பாட்டு, வேண்டி, செல்ல, என்றாலும், சென்று, சும்மை, வெள்ளி, போல், என்னும், ஈரும், பேனும், பலரும், அரண்மனையில், அவனது, அன்று, தடாரி, தலைவனை, விடியல், அவன், இடும்பை, அங்கே, பரிசு, பெற்றோன், பெரும்பெயர், கூடி, கேற்ப, பாணிக், சங்க, காடுறை, கடன், பாடின, ஏழின், கிழவ, அந்தக், கோடியர், மிக்க, ஒன்று, நிழல், ஏற்பவும், பொருநனை, அவனை, புலவர், யானைகள், முரசை