பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு

நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ் நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச் |
காஞ்சிமா நகரமானது நீலநிற உருவம் கொண்ட திருமால் படுத்திருப்பது போலவும், திரையனின் அரண்மனையானது திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன் அமர்ந்திருக்கும் தாமரையின் பொகுட்டு போலவும் அமைந்திருக்கும். காஞ்சிமா நகரம் தாமரை என்றால் அரசன் திரையனின் அரண்மனை அதன் பொகுட்டு. தாமரைப் பூவில் உள்ள நடுமேடு (அரசன் பிரமன் போன்றவன்)
சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பி | 405 |
னிழுமென் புள்ளி னீண்டுகிளைத் தொழுதிக் கொழுமென் சினைய கோளி யுள்ளும் பழமீக் கூறும் பலாஅப் போலப் புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ |
410 |
விழவுமேம் பட்ட பழவிறன் மூதூ |
காஞ்சிமாநகரம் எப்போதும் விழாக் கொலமாக இருக்கும். காஞ்சிமா நகரத்தின் வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. கிளையில் பழுக்கும் பழங்கள் பலவற்றுள்ளும் பலா சிறந்தது. அதில் ஈ மொய்க்கும். இழுமென் புள் என்பது ஈ. உலகம் புலவு நாற்றம் அடிக்கும் கடலை ஆடையாக உடுத்திக் கொண்டுள்ளது. வானத்தை முடியாகச் சூடிக்கொண்டுள்ளது. பலாப்பழத்தின் சுளைகளில் பழம் தின்னும் கொசு-ஈக்கள் மொய்ப்பது போல உலகின் பல்வேறு திசைகளிலுள்ள மக்கள் விழாக் காலத்தில் காஞ்சிமா நகருக்கு வந்து தொழுவர். விழாக் கொண்டாடுவதில் பழம் பெருமை கொண்டது காஞ்சிமாநகரம்.
இளந்திரையனின் போர் வெற்றி
ரவ்வாய் வளர்பிறைச் சூடிச் செவ்வா யந்தி வானத் தாடுமழை கடுப்ப வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப் |
415 |
பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே ராராச் செருவி னைவர் போல வடங்காத் தானையோ டுடன்றுமேல் வந்த வொன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்துக் கச்சி யோனே கைவண் டோன்ற |
420 |
காஞ்சி அரசன் இளந்திரையன் கொடையையே கைக்கு வளமாகப் பெற்றுத் தோன்றியவன். நூற்றுவரை வென்ற ஐவர் போல பல போர்களில் வெற்றி கண்டவன். (பிறவிக் கொடையாளி) (வலிமையா, வளமா?) கையின் வலிமையை விடக் கையின் வளமே (கொடையே) மேலானது. போர்களத்தில், வெட்டப்பட்ட யானையின் வெண்ணிறத் தந்தத்தைச் சிவந்த குருதி-வெள்ளம் ஈர்த்துச் செல்லும் காட்சியானது வெயில் மறையும் மாலைக் காலத்தில் மழைமேகம் வெண்ணிறப் பிறை நிலாவைச் சூடிச் சிவந்து காணப்படுவது போல் இருக்கும். பிறை சூடிய சிவபெருமான் போல - நினைவோட்டம் தன் பகைவர்களைப் போர்க்களத்தில் மாயச் செய்த இளந்திரையன், நூற்றுவரைப் போர்க்களத்தில் மாயச் செய்த ஐவர் போரிடத் தேரில் சென்றது போலச் சென்று, வெற்றி ஆரவாரத்தோடு, தேரில் திரும்பி வந்த வள்ளல் ஆவான்.
னச்சிச் சென்றோர்க் கேம மாகிய |
அரசனது முற்றச் சிறப்பு
வளியுந் தெறலு மெளிய வாகலின் மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோருந் |
425 |
துப்புக்கொளல் வேண்டிய துணையி லோருங் கல்வீ ழருவி கடற்படர்ந் தாங்குப் பல்வேறு வகையிற் பணிந்த மன்ன |
திரையனை விரும்பி அவனிடம் செல்பவர்களுக்கு அவன் பாதுகாவலாக விளங்குவான். நண்பர்கள் விரும்பியதை அவன் மழைபோல் அள்ளித் தருவான். பகைவர்களை அவன் தீயைப்போல் சுட்டெரிப்பான். அவனை எதிர்த்துப் போரிட்டவர்களின் நிலம் பாழாகும். அவனை நயந்து வாழ்வோரின் நிலம் பொன் கொழித்துப் பூக்கும். மலையிலிருந்து இறங்கும் அருவி கடலை நோக்கிச் செல்வது போல், அரசர்களும் மக்களும் அவனது நட்பைப் பெறுவதற்காக அவனைச் சூழ்ந்து வந்து கொண்டேயிருப்பர். துணை இல்லாதவர்கள் அவனது துணை-வலிமையைப் பெறுவதற்காக அவனைச் சூழ்ந்து வந்து கொண்டேயிருப்பர். அவனைச் சுற்றிப் படர்ந்து கொண்டேயிருப்பர். பணிந்து கொண்டேயிருப்பர்.
ரிமையவ ருறையுஞ் சிமையச் செவ்வரை வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப் |
430 |
பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கைப் பெருநீர் போகு மிரியன் மாக்க ளொருமரப் பாணியிற் தூங்கி யாங்குத் தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச் செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்துப் |
435 |
இமையோர் உறையும் சிமையம் ஆகையால் இமையம். (ஹிமம் = பனி – வடமொழி), இமயமலை = பனிமலை, அந்தச் சிறந்த இமையமலையின் வெள்ளைத் திரையைக் கிழித்துக் கொண்டு கங்கையாறு இறங்கிக் கொண்டிருக்கும். அது அந்த மலையில் விளங்கும் சுடர் போல் கங்கை இறங்கும். தன் பொலிவைக் காட்டிக் கொண்டு இறங்கும். கங்கையைச் படகின் துணை இல்லாமல் கடந்து செல்ல இயலாதாகையால் அது போக்கருங் கங்கை. கங்கையாற்றில் படகில் செல்வதற்குப் படகுக்காகக் கரையில் காத்திருக்கும் மக்களைப் போல இளந்திரையனின் முகப்பார்வை கிட்டாதா என்று அவனைப் பணியும் மன்னர்கள் காத்துக் கிடப்பார்கள். மதிப்பில் தொய்வு இல்லாத பெருஞ் செல்வத்துடன் வந்து நெருங்கி நின்று காத்துக் கிடப்பர்.
திரையன் மந்திரச் சுற்றத்தொடு அரசு வீற்றிருக்கும் காட்சி
பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்குங் கருங்கைக் கொல்ல னிரும்புவிசைத் தெறிந்த கூடத் திண்ணிசை வெரீஇ மாடத் திறையுறை புறவின் செங்காற் சேவ லின்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் |
440 |
அரசன் இளந்திரையனின் அரண்மனை ஓங்கி உயர்ந்த மாடங்களைக் கொண்டது. அதில் புறாக்கள் வாழும். அவற்றில் ஆண்-புறாக்களின் கால்கள் சிவப்புநிறம் கொண்டவை. கொல்லர் போர்-யானைகளின் தந்தங்களுக்கு காப்பு வளையல்கள் செய்வார்கள். அதற்காக அவர்கள் உலைக்கூடத்தில் இரும்பைத் தட்டும் ஓசையைக் கேட்டு அஞ்சி வெருவி அங்குள்ள மாடப் புறாக்களின் சேவல்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும். அரண்மனையில் செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, வந்து, கொண்டேயிருப்பர், காஞ்சிமா, அரசன், இலக்கியங்கள், வெற்றி, அவனைச், இறங்கும், இளந்திரையனின், அவன், விழாக், பத்துப்பாட்டு, பொரும்பாணாற்றுப்படை, துணை, போல், மாயச், செய்த, போர்க்களத்தில், தேஎம், தேரில், பெறுவதற்காக, கொண்டிருக்கும், கங்கை, காத்துக், புறாக்களின், கொண்டு, சூழ்ந்து, நிலம், அவனது, பிறை, அவனை, குருதி, அரண்மனை, சூடிய, காஞ்சிமாநகரம், இருக்கும், பொகுட்டு, திரையனின், சங்க, தாமரைப், போலவும், அதில், கடலை, சூடிச், வந்த, இளந்திரையன், ஐவர், போர், கொண்டது, பழம், பல்வேறு, காலத்தில், கையின்