பட்டினப்பாலை - பத்துப்பாட்டு

புலிப்பொறிப் போர்க்கதவின் | 40 |
திருத்துஞ்சுந் திண்காப்பிற் புகழ்நிலைஇய மொழிவளர அறநிலைஇய அகனட்டிற் சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுபோலப் பரந்தொழுகி |
45 |
ஏறுபொரச் சேறாகித் தேரொடத் துகள் கெழுமி நீறாடிய களிறுபோல வேறுபட்ட வினையோவத்து வெண்கோயில் மாசூட்டுந் |
50 |
திருமாவளவனின் வெள்ளை மாளிகை - அரசனின் வெள்ளை-மாளிகையின் கதவில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அங்கே மொழி வளரப் பாடுபடுவோருக்கு உணவு வழங்கப்படும். புலிச் சின்னம் - திருமாவளவன் அரண்மனையின் கதவில் புலி உருவம் பொறிக்கப் பட்டிருந்தது. அரண்மனையில் செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கியது. மொழி வளர்க்கும் அறச்சாலை - தமிழ்மொழி நிலைபெற்ற புகழ் உடையது. அது மேலும் வளர்வதற்காக அறச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. சோறு – சேறு – நீறு - அறச்சாலையிலுள்ள சமையலறையில் சோறாக்கி வடித்த கஞ்சி ஆறுபோல ஓடியது. அங்கு யானைகள் போரிட்டதால் அதன் காலடியில் கஞ்சி ஓடிப் பாயும் மண் சேறாக மாறியது. அவ்வழியே தேர்கள் சென்றதால் சேற்றுமண் காய்ந்து பொடிமண் நீராக மாறியது. ஓவியம் - அரண்மனைச் சுவரில் கலைத்திற வேலைப்பாடுகளுடன் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. வெண்கோயில் - வெள்ளை மாளிகையாக விளங்கிய அரண்மனைச் சுவரிலிருந்த ஓவியங்களைத் தேர்த்துகள்களின் புழுதிகள் மாசுபடச் செய்தன.
தண்கேணித் தகைமுற்றத்துப் பகட்டெருத்தின் பலசாலைத் தவப்பள்ளித் தாழ்காவின் அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம் |
55 |
மாயிரும் பெடையோ டிரியல் போகிப் பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த் தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும் |
கேணி-முற்றத்தில் முனிவர் தீ வளர்த்து வேள்வி செய்வர். தவப்பள்ளி - கேணி முற்றம் - விரிந்த சடைமுடி கொண்ட முனிவர்கள் தீ வளர்த்து வேள்வி செய்தனர். கேணிக்கரையின் முற்றத்தில் செய்தனர். திருமறைப் பாட்டுப் பாடிக்கொண்டு செய்தனர். பாட்டொலி மிடற்றிலிருந்து வந்தது. தாழ்ந்த காட்டுப் பகுதியிலிருந்த முனிவர்களின் தவப் பள்ளிகள் பலவாக இருந்தபடியால் அவை ‘பல்சாலை’ எனப் பெயர் பெற்றிருந்தன. வேள்விப் புகையை அங்கிருந்த குயில்கள் வெறுத்தன. தம் பெண்குயிலோடு பறந்து சென்றன. பூதம் காவல் புரியும் காப்புள்ள கோயில் பகுதிக்குச் சென்றன. அங்கே தங்கியிருந்த தூதுணம் புறாக்களோடு ஒதுக்கிடங்களில் தங்கின. இடைக்குறிப்பு - பொய் வேடதாரிகளையும், பொல்லாங்கு செய்வோரையும் ‘பூதம் புடைத்து உண்ணும் பூதச்சதுக்கம்’ – சிலப்பதிகாரம் 5 134, பூதச் சதுக்கத்தில் ‘அரசன் வெல்க’ என்று பலி கொடுத்தனர். மணிகேகலை 7 78, புகார் நகரத்தில் காயசண்டிகாயை அவளது கணவன் காஞ்சணன் தேடிய இடங்கள், பூதச்சதுக்கம், பூமரச்சோலை, மாதவர் இடங்கள், மன்றம், பொதியில் , (மணிமேகலை 20 22). கணவனை அன்றி வேறு தெய்வத்தைத் தொழாத கற்புக்கரசி மருதியின் அழகில் மயங்கிய ககந்தன் மகன் தன் ஆசைக்கு இணங்கும்படி மருதியை அழைத்தான். ‘பிறர் நெஞ்சு புகுந்தேன் என்னைக் கொன்றுவிடு’ என்று மருதி சதுக்கப் பூதத்திடம் முறையிட்டாள். அப் பூதம் அவளது கற்பை எண்ணி அவளை உண்ண மறுத்து விட்டது. (மணிமேகலை 22 – 50, 55)
முதுமரத்த முரண் களரி |
மக்களின் விளையாட்டுக்கள்
வரிமணல் அகந்திட்டை | 60 |
இருங்கிளை யினனொக்கற் கருந்தொழிற் கலிமாக்கள் கடலிறவின் சூடுதின்றும் வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மலைந்தும் |
65 |
புனலாம்பற் பூச்சூடியும் நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும் நாண்மீன் விராய கோண்மீன் போல மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக் கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் |
70 |
பெருங்சினத்தாற் புறக்கொடாஅது இருஞ்செருவின் இகல்மொய்ம்பினோர் கல்லெறியும் கவண்வெரீஇப் புள்ளிரியும் புகர்ப்போந்தைப் பறழ்ப்பன்றிப் பல்கோழி |
75 |
உறைக்கிணற்றுப் புறச்சேரி மேழகத் தகரொடு சிவல்விளை யாடக் |
காவிரிப்பூம்பட்டினத்தில் கையாலும், கருவிகளாலும் மோதி, கவண் எறிந்து போர்ப்பயிற்சி பெறும் முரண்-களரி இருந்தது. இது வீர விளையாட்டுக்களின் பயிற்சிக்களம். இதற்கு முரண் களரி என்று பெயர். முதிர்ந்த மரங்கள் சூழ்ந்த ஆற்றோர மணல்திட்டில் ‘முரண்களரி’ எனப்பட்ட போர்ப் பயிற்சிக்களம் இருந்தது. கருந்தொழில் மாக்கள் - செந்தொழில் = உதவி புரியும் தொழில், கருந்தொழில் = போர்த்தொழில், கருந்தொழில் மக்களின் சுற்றத்தார் தங்களுக்குள்ளே மோதி ஆரவாரத்துடன் போர்ப்பயிற்சி செய்து கொண்டனர். சத்துணவு - கடலில் பிடித்த இறால் மீனைச் சுட்டுத் தின்றனர். வயலில் பிடித்த ஆமைக் கறியை வேகவைத்துத் தின்றனர். அடையாளப் பூ - அடையாளம் தெரிவதற்காக ஒருவர் மணல் மேட்டில் பூக்கும் அடும்பு மலரைத் தலையில் அணிந்திருந்தார். மற்றொருவர் நீரில் பூக்கும் ஆம்பல் மலரை மாலையாகக் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். நடுவர் - “நாள் மீன்’ என்னும் சூரியன் போல் நடுவர் நடுவில் இருந்தார். சூரியனைச் சுற்றிக் கோள்கள் சுழல்வது போல் போர்ப்பயிற்சிகள் நடந்தன. மலர்தலை மன்றம் - மலரும் தலைமுறையினரின் (இளைஞர்களின்) மன்றம் அந்த முரண்களரி. கைப்போர் - மற்போர், குத்துச் சண்டை போன்ற சண்டைப் பயிற்சிகளில் காயால் மோதிக்கொண்டனர். இகல் மொய்ம்பினோர் - இகல் என்பது விளையாட்டுக்காக மாறுபடல். அழிக்கும் பகை அன்று. உடலின் திணவைக் காட்டுவது இகல். ஆகையால் சினங்கொண்டு பின்வாங்காமல் தாக்கினர். கவண் - கவணில் கல்லை வைத்து எறிந்து தாக்குவது. அக்காலப் போர் முறைகளில் ஒன்று. இதில் அவர்கள் பயிற்சி செய்தபோது வீசிய கற்களால் பனை மரத்திலிருந்த பறவைகள் பறந்தோடிச் சென்றன. ஆட்டுச் சண்டை(நிகழ்வுப்படம்) \ காடைச் சண்டை \ அந்தப் பனை மரத்தடியில் செம்மறியாட்டுக் கடாவையும், சிவல் என்னும் காடைகளையும் மோதவிட்டு அவற்றின் சண்டையைப் பாரத்துக் கொண்டிருந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டினப்பாலை - பத்துப்பாட்டு, இலக்கியங்கள், பட்டினப்பாலை, சென்றன, களரி, செய்தனர், முரண், மன்றம், கருந்தொழில், வெள்ளை, இகல், சண்டை, பத்துப்பாட்டு, என்னும், மலர்தலை, மக்களின், மோதி, போல், கவண், பிடித்த, தின்றனர், பூக்கும், மணிமேகலை, பயிற்சிக்களம், எறிந்து, போர்ப்பயிற்சி, நடுவர், புரியும், கஞ்சி, மாறியது, அரண்மனைச், அறச்சாலை, மொழி, சங்க, கதவில், அங்கே, முனிவர், தூதுணம், பெயர், பூதம், அவளது, வேள்வி, வளர்த்து, கேணி, முற்றத்தில், இடங்கள்