மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு

குரவை ஒலியும் பிற ஓசைகளும் மலிந்த ஊர
நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர் பாடு சிலம்பு மிசை யேற்றத |
90 |
தோடு வழங்கும் அக லாம்பியிற் கய னகைய வய னிறைக்கு மென் றொடை வன் கிழாஅர் அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணி இரும்புள் ஒப்பும் இசையே என்றும் |
95 |
மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானற் பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப |
பொருநர்க்கு யானை முதலிய பரிசுகளைப் பாண்டியன் கொடுத்தல்
ஒருசார், விழவுநின்ற விய லாங்கண் முழவுத் தோள் முரட் பொருநர்க்கு உரு கெழு பெருஞ் சிறப்பின் |
100 |
இரு பெயர்ப் பேரா யமொடு இலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும் பொலந் தாமரைப் பூச் சூட்டியும் நலஞ் சான்ற கலஞ் சிதறும் பல் குட்டுவர் வெல் கோவே! |
105 |
சேரநாட்டின் பகுதியான குட்டநாட்டில் ஆங்காங்கே பல மன்னர்கள் ஆண்டு வந்தனர். இவர்களைக் ‘குட்டுவர்’ என்றனர். இப்படிப்பட்ட குட்டுவர் பலரை நெடுஞ்செழியன் வென்றான். ‘கிழார்’ எனப்படுவோர் நன்செய்நில உழவர். ‘தொழுவர்’ என்போர் நிலப் பணியாளர். தொழுவர் ஆற்று நீரை மேட்டு நிலங்களுக்கு ஏற்றத்தால் தெவ்வி இறைத்துப் பாய்ச்சினர். நீர் இறைக்கும்போது அவர்கள் பாடிய பாட்டிசை எங்கும் முழங்கியது. ‘ஆம்பி’ எனபது ஏற்றத்தில் நீரை மொண்டு ஊற்றும் சால். ‘தோடு’ என்பது ஆம்பியை ஏற்றத்தில் தொடுக்கும் பகுதி. அகன்ற ஆம்பியின் வாயில் நீரை மொள்ளும்போது ஆற்றிலிருந்த கயல் மீன்களும் மொண்டு ஊற்றப்படுவது உண்டு. அவ்வாறு மொண்டு ஊற்றப்பட்ட கயல்மீன்கள் வயலில் புரண்டன. கிழார் போர் அடிக்க எருதுகளைக் கயிறுகளைத் துவளவிட்டு மென்மையாகத் தொடுத்தனர். அந்த எருதுகளின் மணியோசை தெளிவாகவும் இனிமையாகவும் கேட்டது. இந்த ஓசையைக் கேட்டுப் பறவைகள் பறந்தோடின. பரதவர் மகளிர் கடற்கரை மணலில் முண்டக மரத்தடியில் குரவை ஆடிக் குரவை (குலவை) ஒலி எழுப்பினர். இது வயல்வெளிப் பகுதியில் நிகழ்ந்தது. மற்றொரு பக்கம் ஊர்ப்பகுதியில் விழாக் கொண்டாடும் மன்றங்களில் கலைஞர், உழவர், மறவர் ஆகியோருக்குக் கொடை வழங்கும் பாங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. கொடையானது தங்கத் தாமரைப்பூ விருதாகவும் , விருதுக் கிண்ணங்களாகவும் இருந்தன.
முதுவெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு
கல் காயுங் கடுவேனி லொடு இரு வானம் பெயலொ ளிப்பினும் வரும் வைகல் மீன் பிறழினும் வெள்ளமா றாது விளையுள் பெருக நெல்லி னோதை அரிநர் கம்பலை |
110 |
புள்ளிமிழ்ந் தொலிக்கும் இசையே என்றும் சலம் புகன்று கறவுக் கலித்த புலவு நீர் வியன் பெளவத்து நிலவுக் கானல் முழவுத் தாழைக் குளிர்ப் பொதும்பர் நளித் தூவல் |
115 |
நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு ஒலி யோவாக் கலி யாணர் முது வெள்ளிலை மீக் கூறும் |
மலையே காய்ந்து போகும்படி கடுமையான கோடை வந்தாலும், கரு மேகங்கள் மழை பொழியாவிட்டாலும், நாள்தோறும் காலையில் தோன்றும் கதிரவன் வடபாலோ தென்பாலோ பாகைஇடம் சாய்ந்து எழுந்தாலும், வைகை யாற்றில் வெள்ளம் வருவது மாறாததால் விளைச்சல் பெருகி நெல் அறுப்போர் பாடும் பாடலோசை, நீர்ப்பறவைகளின் பாடல் ஓசை. திமில்படகு வேட்டுவர் ஓசை. பெருங்கடலில் சுறா மிகுந்துள்ள இடங்களுக்கு விரும்பிச் சென்று கட்டு மரங்களில் மீனைப் பிடித்துக் கொண்டுவந்து நிலாமணல் கரையில் தாழை மரத்தடிக்கு எற்றும்போது முழவை முழக்கிக்கொண்டு பாடும் பாடல் ஓசை . உப்பு விற்போர் கூவும் ஓசை ஆகிய ஓசைகளோடு சேர்ந்து, முதுவெள்ளில் என்னும் பாண்டிய நாட்டுத் துறைமுகப் பகுதியில் அரசனை வாழ்த்தும் ஒலியும் கேட்டுக்கொண்டேயிருக்கும். முதுவெற்றிலை = தூத்துக்குடி.
முதுவெள்ளிலையார் ஏவல் கேட்ப, தலையாலங்கானத்தில் பகைவர்களை வென்றமை
வியன் மேவல் விழுச் செல்வத்து | 120 |
இரு வகையான் இசை சான்ற சிறு குடிப் பெருந் தொழுவர் குடி கெழீஇய நானிலவ ரொடு தொன்று மொழிந்து தொழில் கேட்பக் |
சிறுகுடியில் வாழ்ந்த பெருந்தொழுவர் அறிவு வழங்குதல், ஆக்கம் பெற உதவுதல் என்னும் இருவேறு பாங்குகளால் புகழ் பெற்றிருந்தனர். பலரும் விரும்பிப் பேணும் பெருஞ்செல்வம் பெற்றவர்களாகவும் விளங்கினர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களிலும் வாழ்ந்த இவர்கள் வழிவழியாகப் பாண்டியன் இட்ட பணியையும் நிறைவேற்றி வந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, என்னும், இலக்கியங்கள், மொண்டு, மதுரைக்காஞ்சி, குரவை, பத்துப்பாட்டு, நீரை, பகுதியில், ஏற்றத்தில், நீர், வியன், பாடல், வாழ்ந்த, பாடும், வேட்டுவர், உழவர், கம்பலை, சான்ற, வழங்கும், இசையே, தொழுவர், ஒலியும், சங்க, என்றும், பரதவர், குட்டுவர், முழவுத், பாண்டியன், மகளிர், வந்தனர்