மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு

சூல்மகளிர் தேவராட்டியுடன் நின்று தெய்வத்திற்கு மடை கொடுத்தல்
திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக் குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி |
605 |
நுண்ணீ ராகுளி இரட்டப் பலவுடன் ஒண்சுடர் விளக்க முந்துற மடையொடு நன்மா மயிலின் மென்மெல இயலிக் கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது பெருந்தோட் சாலினி மடுப்ப ஒருசார் |
610 |
சாலினி என்போர் குருகேறி ஆடும் பெண். ஒருபக்கம் சாலினி நிறைமாதப் பெண்களைப் பேணித் தம் பருத்த தோள்களை உயர்த்திக் கைகூப்பித் தொழுதாள். அவள் தொழும்போது யாழ் மீட்டப்பட்டது முழவு முழங்கிற்று. உடுக்கு அடிக்கப்பட்டது. ஆகுளி இரட்டல் ஒலி முழங்கிற்று. விளக்கு காட்டப்பட்டது. உணவு கொண்டு செல்லப்பட்டது. மெல்ல மெல்லத் தானும் நடந்து பிள்ளைத் தாய்ச்சியையும் நடத்திக் கொண்டிருந்தாள். யாழ் நரம்புகள் இசைப்பதற்கு ஏற்ற வகையில் நிறுத்தப்பட்டன. கற்பினை உருப்பொருளாகக் கொண்ட செவ்வழிப் பண் யாழில் இசைக்கப்பட்டது. மகளிர் மேனியிலுள்ள மாமை நிறம் எப்படியிருக்கும் என்பது இங்கு உவமையால் உணர்த்தப்படுகிறது. அவள் நிறம் மயில் தோகை போன்றது. மாமை மயில் தோகையிலுள்ள புள்ளிகள் போன்றது.
வேலன் வழிபாடும், குரவைக் கூத்தும்
அருங்கடி வேலன் முருகொடு வளைஇ அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக் கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும் |
615 |
மற்றொரு பக்கம் வேலன் முருகேறி ஆடும் குரவை ஆட்டம் நிகழ்ந்தது. வேலன் குறிஞ்சிப்பூ சூடியிருந்தான். கடம்பு சூடிய கடவுள் முருகனை வழிபாடு செய்துகொண்டு குரவை ஆடினான். மகளிரும் மைந்தரும் தோளோடு தோள் தழுவிக்கொண்டு ஆடுவது ‘தழூஉ’ ஆட்டம். இவர்கள் தழூஉ ஆடும்போது விட்டிசை கூட்டும் இன்னிசைக் கருவிகள் முழங்கின. அதன் தாள இசைக்கேற்ப தப்படி போட்டு [நேர் நிறுத்து] வேலன் ஆட்டம் நிகழ்ந்தது.
இரவின் முதற் சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப் |
சாலினி ஆட்டம் குரவை எனப்படும். வேலன் ஆட்டம் தழூஉ எனப்படும். இந்த இருபாலார் ஆட்டத்தையும் வெறி என்பர். வெறியாட்டத்தின்போது இடையிடையே பேசுவார்கள், பாடுவார்கள், ஆடுவார்கள். எனவே இதனை வெறிக்கூத்து என்றும் வழங்குவர்.
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட் சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு முந்தை யாமம் சென்ற பின்றைப் |
620 |
தன் வள்ளண்மையால் பெரும்புகழ் பெற்றவன் நன்னன். நன்னன் = திருமால் எனலுமாம். அவன் அரியணை ஏறி அரசனாகிய நாள் அவனுக்குப் ‘பெரும் பெயர் நன்னாள்’ ஆண்டுதோறும் அந்த நாள் கொண்டாடப்படும்போது மக்கள் ஆர்ப்பரித்து முழங்குவர். அது போல மதுரையில் முதல்யாமம் ஆர்ப்பரிப்போடு கழிந்தது.
இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை
பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து நொடைநவில் நெடுங்கடை அடைத்து மடமதர் ஒள்ளிழை மகளிர் பள்ளி யயர |
சங்குகளின் முழக்கம் அடங்கிப் போயிற்று. மகளிர் இல்லக் கதவுகளை அடைத்தனர். காழ் எனப்படும் தாழ்ப்பாள் போட்டனர். கதவை மூடும்போதும், தாழ்ப்பாள் போடும்போதும் இசைத்தொடை எழுந்து நவின்றது. மகளிர் பள்ளி கொண்டனர். அவர்கள் மடமையும் தூக்க மதமதப்பும் கொண்ட நிலையினராய் அயர்ந்து தூங்கினர். இவ்வாறு இரண்டாம் யாமம் கழிந்தது.
நல்வரி இறாஅல் புரையு மெல்லடை அயிருருப் புற்ற ஆடமை விசயங் |
625 |
கவவொடு பிடித்த வகையமை மோதகந் தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க விழவி னாடும் வயிரியர் மடியப் |
அடை, ஆப்பம், பாயசம் போன்றவற்றை மூன்றாம் யாமம் வரையில் விழித்திருந்து விற்றவர்கள் அந்த யாமம் முடியும்போதே தூங்கி வழிந்து உறங்கலாயினர். விழாவில் நாடகம் ஆடுவோரும் தம் நாடகத்தை முடித்துக்கொண்டனர்.
பாடான் றவிந்த பனிக்கடல் புரையப் பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப் |
630 |
மூன்றாம் சாம நிகழ்ச்சிகள்
பானாட் கொண்ட கங்கு லிடையது பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற் கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப |
கடலில் அலை ஓயாது. பனியால் மூடப்பட்டிருக்கும் கடலில் அலை இருக்குமா? பனிக்கடல் போல மக்கள் படுத்து இனிமையாக உறங்கினர். கங்குல் 6 யாமங்கள் கொண்டது. அதில் 3 கழிந்து விட்ட படியாலே இரவுக்காலத்தில் அது பாதிநாள் [பானாள்] ஆயிற்று. இந்த நேரத்தில் பேய், அணங்கு, கூற்றம், கழுது ஆகியவை சுழன்று கொண்டிருந்தன.
இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத் |
635 |
தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச் சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல் நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர் மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர் |
640 |
நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும் கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத் துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர் அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த |
645 |
நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர் தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக மழையமைந் துற்ற அரைநா ளமயமும் அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலிற் |
650 |
கடவுள் வழங்குங் கையாறு கங்குலும் அச்ச மறியா தேம மாகிய மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப் |
வைகறை - பேய் வழங்கும் 4ஆம் யாமம் போனபின் கடவுள் வழங்கும் 5ஆம் யாமம் வந்தது. காப்பாற்றுபவரைக் கடவுள் என்கிறோம். மக்கள் உறங்கும்போது அவர்களது உடைமைகளைக் காப்பாற்றுபவரைக் கடவுள் எனல் தகும் என்று காட்டுவதாக இப் பாடற்பகுதி அமைந்துள்ளது. ஊர் காப்பாளரும் கடவுளரும் வழங்கிக் கொண்டிருப்பதால் மக்கள் அச்சம் என்பதையே அறியாமல் பாதுகாப்பாக உறங்கினர். பகலில் அச்சமின்றிப் பணியாற்றுவது போல் இரவில் அச்சமின்றி உறங்கினர். ஊர் காப்பாளரின் தோற்றமும், காவற்பணியும் எவ்வாறு இருந்தன என்று விரிவாகச் சொல்லப்படுகிறது. முக்காடு - யானையின் மேல்தோல் நிறத்தில் முக்காடு (‘இருள்’) போட்டுக் கொண்டிருந்தனர். வாள் - கையிலே வாள் இருந்தது. அது கல்லையும் மரத்தையும் வெட்டிச் சாய்க்கும் கூர்மை உடையதாக இருந்தது. வாளை உறையில் (‘தொடலை’) போட்டுக்கொண்டு திரிந்தனர். தொடுதோல் – காலிலே செருப்பு அணிந்திருந்தனர். கச்சு - இடையின் குறங்குப் பகுதியில் (தொடைக்கு மேலுள்ள இடுப்புப் பகுதியில்) கச்சு அணிந்திருந்தனர். கூர்நுனைக் குறும்பிடி என்பது கைவிரல்கள் போன்ற நுனியில் மாட்டிப் பிடித்துக்கொள்ளும் பெல்ட் பக்கில் belt buckle அந்தக் கச்சின் நிறம் நீலம். அதில் கருமணல் போன்ற புள்ளிகள் இருந்தன. கண் பார்வை - அவர்களுடைய கண்கள் திருடர்களை ஒற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. திருடர் - திருடர் நிலத்தைப் பறிக்கும் கன்னுளி (கன்னக்கோல்) வைத்திருப்பர். அணிகலன்கள் பாதுகாக்கப்படும் இடத்தை ஆசையோடு ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருப்பர். புலி யானையை வீழ்த்தக் காலம் பார்த்துக் கொண்டிருப்பது போல் உடைமையாளர் எப்போது கண் சோர்வர் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். ஊர்காப்பாளர் – இவர்களைப் பிடிக்க ஊர்காப்பாளர் கண் சோராமல் தேடுவர். ஊர்காப்பாளர் திருடர்களுக்கு அஞ்சாதவர். அதாவது அஞ்சாமையே அவர்களது கோட்பாடு. அவர்களது ஆண்மையானது persionality அறிந்தவர்கள் அனைவராலும் புகழப்படும். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத செறிவு உடையவர்கள். ஊர்காப்பாளருக்கு உதவும் இலக்கண நூல் – ஊர்காப்பாளர் இலக்கணம் சொல்லும் நூல் அக்காலத்தில் இருந்தது. குற்றவாளிகளை நூல்போல் தொடரும் பாங்கு கூறப்பட்டிருந்தது. அதன்படி மிக நுட்பமாகக் குற்றவாளிகளைப் பின்தொடர்வதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். எய்தால் வெல்ல முடியாத ‘ஊக்கருங் கணை’ அவர்களிடம் இருந்தது. அச்சமில்லா உறக்கம் – வழங்கல் = புழக்கத்தில் இருத்தல். ஊர்காப்பாளர் தெருவில் புழங்கிக் கொண்டிருந்ததால் மக்கள் பாதுகாப்பாக உறங்கினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, யாமம், வேலன், ஊர்காப்பாளர், கடவுள், மக்கள், மகளிர், ஆட்டம், உறங்கினர், குரவை, சாலினி, இலக்கியங்கள், எனப்படும், மதுரைக்காஞ்சி, பத்துப்பாட்டு, நிறம், பார்த்துக், நன்னன், அவர்களது, வழங்கும், கூர்நுனைக், கடலில், அதில், பேய், கொண்டிருந்தன, கொண்டிருப்பர், வாள், முக்காடு, அணிந்திருந்தனர், கச்சு, பகுதியில், இருந்தன, போல், பாதுகாப்பாக, திருடர், நூல், பனிக்கடல், காப்பாற்றுபவரைக், அந்த, கொண்ட, மாமை, என்பது, மயில், முழங்கிற்று, யாழ், சங்க, ஆடும், பேணித், அவள், போன்றது, புள்ளிகள், இரண்டாம், பள்ளி, தாழ்ப்பாள், எழுந்து, கழிந்தது, நாள், நிகழ்ந்தது, தழூஉ, நிகழ்ச்சிகள், மூன்றாம்