குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு
கலிகெழு மரமிசைச் சேணோ னிழைத்த | 40 |
புலியஞ் சிதண மேறி யவண சாரற் சூரற் றகைபெற வலத்த தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங் கிளிகடி மரபின வூழூழ் வாங்கி யுரவுக்கதிர் தெறூஉ முருப்பவி ரமயத்து |
45 |
செழுமையான மரத்துண்டுகளைக் கொண்டு பரணிப்பந்தல் போடுபவன் தினைவயலில் பரணிப்பந்தல் அமைத்திருந்தான். மரமேறும் புலிகூட அதில் ஏற அஞ்சும் தகைமையது அந்தப் பரணிப்பந்தல். அதன்மேல் ஏறி இருந்துகொண்டு நாங்கள் கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்தோம். தழல், தட்டை, குளிர் போன்ற இசைக் கருவிகளைத் தட்டி ஒலி எழுப்பி ஓட்டிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்…
சுனையில் நீராடல்
விசும்பாடு பறவை வீழ்பதிப் படர நிறையிரும் பெளவங் குறைபட முகந்துகொண் டகலிரு வானத்து வீசுவளி கலாவலின் முரசதிர்ந் தன்ன வின்குர லேற்றொடு நிரைசெல னிவப்பிற் கொண்மூ மயங்கி |
50 |
யின்னிசை முரசிற் சுடர்ப்பூட் சேஎ யொன்னார்க் கேந்திய விலங்கிலை யெஃகின் மின்மயங்கு கருவிய கன்மிசைப் பொழிந்தென |
அள்ள அள்ளக் குறையாத கடலிலிருந்து மேகமானது நீரை முகந்துகொண்டு காற்றால் உந்தப்பட்டு வானில் மிதந்து அல்லாடிக்கொண்டிருந்தது. வீசிய பெருங்காற்றில் தள்ளாடிய பறவைகள் தம் இருப்பிடங்களுக்குச் சென்றுகொண்டிருந்தன. முரசு அதிர்வது போல் மேகங்கள் இனிமையாக முழங்கின. ஏராளமாகச் சென்ற மேகங்கள் ஒன்றோடொன்று தழுவிக்கொள்ளும்போது, முரசு முழக்கத்துடன் செல்லும் முருகனின் வேல் மின்னுவது போல மின்னல்கள் தோன்றின. அவை மலைமேல் மழையாகப் பொழிந்தன.
வண்ண னெடுங்கோட் டிழிதரு தெண்ணீ ரவிர்துகில் புரையு மவ்வெள் ளருவித் |
55 |
தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப் பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி |
மழைநீர் உச்சிமலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தது. அருவியில் அது இறங்கும்போது விரிந்தாடும் வெள்ளைத்துணி போல் காணப்பட்டது. அந்த அருவியில் நீங்காத ஆசையோடு கட்டுப்பாடின்றி நீராடிக்கொண்டிருந்தோம். பளிங்கு போன்ற அந்தச் சுனையில் மூழ்கு-நீச்சல் போட்டுக் கொண்டிருந்தோம்
நளிபடு சிலம்பிற் பாயம் பாடிப் பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம் பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவர |
60 |
யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித |
கொட்டும் அருவியில் ஆடினோம். குட்டச் சுனையைக் குடைந்து விளையாடினோம். குளிர்ந்த மலையில் பாயும் நீரிலும் அங்குமிங்கும் பாய்ந்தோடினோம். ஈரம் கோத்துக்கொண்டு பின்னிக்கிடந்த எங்களது கூந்தலில் நீர்த்திவலைகள் சொட்டிக்கொண்டிருந்தன. அவை பொன்னிழையில் பதிக்கப்பட்டுள்ள மணிபோல் எங்களது கூந்தலிலிருந்து தோள்பக்கமாக விழுந்துகொண்டிருந்தன. அவற்றைப் பிழிந்து நாங்கள் உலர்த்திக் கொண்டிருந்தோம்.
பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்தல்
ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந் தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி செங்கொடு வேரி தேமா மணிச்சிகை யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள |
65 |
மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம் வடவனம் வாகை வான்பூங் குடச மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை பயினி வானி பல்லிணர்க் குரவம் பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா |
70 |
விரிமல ராவிரை வேரல் சூரல் குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம் போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி செருத்தி யதிரல் பெருந்தண் சண்பகங் |
75 |
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத் தில்லை பாலை கல்லிவர் முல்லை குல்லை பிடவஞ் சிறுமா ரோடம் வாழை வள்ளி நீணறு நெய்த றாழை தளவ முட்டாட் டாமரை |
80 |
ஞாழன் மெளவ னறுந்தண் கொகுடி சேடல் செம்மல் சிறுசெங் குரலி கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க |
85 |
மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை யடும்பம ராத்திரி நெடுங்கொடி யவரை பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி வஞ்சி பித்திகம் சிந் துவாரம் தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி |
90 |
நந்தி நறவ நறும்புன் னாகம் பாரம் பீரம் பைங்குருக் கத்தி யாரங் காழ்வை கடியிரும் புன்னை நரந்த நாக நள்ளிரு ணாறி மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு |
95 |
மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன் |
பூக்களைப் பறித்துவந்து குவித்து விளையாடுவது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. குவித்த பூக்களைத் தலையில் சூடி ஒப்பனை செய்து கொள்ளுதல், மாலையாகக் கட்டி அணிந்து கொள்ளுதல், தழையோடு கூடிய பூக்களைக் கொண்டு தழையாடை செய்து உடுத்திக் கொள்ளுதல் முதலானவையும் பூ விளையாட்டில் அடங்கும். தழையாடை என்பது உடுத்திக் கொண்டிருக்கும் நூலாடையின் மேல் ஒப்பனைக்காக அணிந்து கொள்ளும் அணியாடை. மழை பெய்து கழுவிய பாறையின்மேல் அவர்கள் குவித்த பூக்கள் இங்கு அகரவரிசையில் அடுக்கித் தரப்படுகின்றன. பூக்களின் எண்ணிக்கை இங்கு 99 என்று எண்ணிட்டுக் காட்டப்பட்டுள்ளது. நுண்ணறிவாளர்களின் எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம். பாடலில் காணப்படும் அடுக்கு-முறை பின்வருமாறு உள்ளது. காந்தள், வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, வேரி, செங் கொடு வேரி, தேமா, மணிச்சிகை, உந்தூழ், உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எறுழம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், வான் பூங் குடசம், எருவை, செருவிளை, கருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, குரவம், பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், காயா, பல் இணர்க் காயா, 70 ஆவிரை, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், பூளை, குரீஇப் பூளை, கண்ணி, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், கோங்கம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, மா, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, முல்லை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நெய்தல், நீள் நறு நெய்தல், தாழை, தளவம், தாமரை, முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், குரலி, சிறுசெங்குரலி, கோடல், கைதை, வழை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, நெய்தல், மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், தணக்கம், பல் பூந் தணக்கம், 85 ஈங்கை, இலவம், கொன்றை, தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, ஆத்தி, அமர் ஆத்தி, அவரை, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பிண்டி, பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், தோன்றி, சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நாகம், நறும் புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி, பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், இருள்நாறி, நள்ளிருள் நாறி, குருந்தம், மா இருங் குருந்தும், வேங்கையும், புழகு, அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு, நெய்தல், கொண்டிருந்தோம், இலக்கியங்கள், பூங், இணர்க், புன்னை, முல்லை, வேரி, பாதிரி, கண்ணி, கொள்ளுதல், காயா, குரவம், பூளை, கமழ், கருவிளை, குவளை, பரணிப்பந்தல், பிண்டி, குறிஞ்சிப்பாட்டு, பத்துப்பாட்டு, அருவியில், வஞ்சி, பித்திகம், குவித்த, செய்து, பலாசம், புழகுடன், வேங்கையும், பாரம், காழ்வை, அணிந்து, நந்தி, துழாஅய், பீரம், குருந்தும், தும்பை, காந்தள், பூந், தணக்கம், கொகுடி, தாமரை, கொன்றை, ஆத்தி, குருக்கத்தி, நாகம், தோன்றி, அவரை, சண்பகம், கோங்கம், பகன்றை, எண்ணிக்கை, இங்கு, உடுத்திக், செங், உந்தூழ், விரி, ஆவிரை, குடசம், எறுழம், தழையாடை, வள்ளி, தேமா, வெட்சி, குறிஞ்சி, பூக்களைப், மணிச்சிகை, சுள்ளி, செருவிளை, வாகை, வடவனம், கூவிரம், எங்களது, மேகங்கள், ஓட்டிக், நாங்கள், கொண்டு, சங்க, அந்த, சுனையில், போல், முரசு, தன்ன, பயினி, வானி, சேடல், வாழை, குல்லை, பாலை, செம்மல், குரலி, பாங்கர், காஞ்சி, கைதை, தில்லை, குளவி, வேரல், வகுளம், பசும்பிடி, பல்லிணர்க், சூரல், குரீஇப், கரந்தை, மருதம், குறுநறுங், மராஅம்