முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு

7. பொய்ப் பத்து
61. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரறவி னோன்இனிது வாழா மைபொய் |
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், ஒருவன் பேரறிவுடையனாயின் அவன் மனத்தால் இன்புற்றொழுகாமை பொய்.
62. பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய் |
பெருஞ் செல்வத்தைப்பெற்றா னொருவன் வெகுளாமை பொய்.
63. கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய் |
கள்ளையுண்போன் ஒழுக்கஞ் சோர்வின்மை பொய்.
64. காலம்அறி யாதோன் கையுறல் பொய் |
காலமறிந்து முயலாதோன் கருமமுடிதல் பொய்.
65. மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய் |
எதிர்காலத்து வரும் இடையூ றறியாதான் தனக்கு அரண்செய்து காத்தல் பொய்.
66. உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய் |
மிக்க கருமம் செய்கைக்கு மடிந்திருப்போன் தனக்கு ஆக்கம் வேண்டுதல் பொய்.
67. சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய் |
பிறர்க்குத் தான்செய்யும் பணிவினைப் பொறாதோன் தனக்குப் பெருமை வேண்டுதல் பொய்.
68. பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய் |
பிறர்க்குத் தான் அரியனாம் பெருமை வேண்டாதான் தனக்குச் சிறுமைக்குணம் வேண்டுதல் பொய்.
69. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய் |
பொருணசையால் வரும் வேட்கையை உடையான் முறைசெய்தல் பொய்.
70. வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய். |
மனத்தின்கண் ‘தூயனல்லாதோன் தவஞ்செய்தல் பொய்.
8. எளிய பத்து
71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது |
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்களெல்லாருள்ளும், ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழுபெறுதல் எளிது.
72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது |
பிறரொடு கலகம் விரும்புவார்க்கு மிக்க செருஎளிது.
73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது |
மனத்துள் ஈரத்தை விரும்பியிருப்பார்க்குப்பிறனொருவன் கேட்கக் கொடுத்தல் எளிது.
74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது |
குறளைச் சொல்லை விரும்புவார்க்கு ஒருவன்மறையச்செய்த தொன்றனை வெளிப்படுத்திப் பிறரையறிவித்தல் எளிது.
75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது |
ஒன்றனை முயன்றுவரும்துன்பத்தை வெறாதார்க்கு இன்பமெய்தல் எளிது.
76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது |
முயன்றுவரும், தன்மையால் வரும் இன்பத்தை விரும்புவார்க்குப் பொருளில்லாமையால் வரும்துன்பம் எளிது.
77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது |
உண்டி மிகவிரும்பினார்க்கு மிக்கபிணி எளிது.
78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது |
பெண்டிரை மிக விரும்பினார்க்குஉண்டாகும் பழி எளிது.
79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது |
பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப்பகுத்துண்டல் எளிது.
80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது |
நன்னட்பைச் சாராதோர்க்குப்பொருந்திய கொலைத்தொழில் செய்தல் எளிது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு, எளிது, பொய், இலக்கியங்கள், யோர்க்குப், யோர்க்கு, முதுமொழிக், வேண்டுதல், காஞ்சி, டல்பொய், கீழ்க்கணக்கு, வரும், பதினெண், மிக்க, பிறர்க்குத், விரும்புவார்க்கு, தனக்கு, பெருமை, னாதோன், உலகத்து, யுலகத்து, ஆர்கலி, பத்து, சங்க, மக்கட், கெல்லாம், சூழப்பட்ட, ஆர்கலியாற், மைபொய், தல்பொய்