முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு
மதுரைக் கூடலூர் கிழார் என்பவரால் பாடப்பெற்றது. பத்து அதிகாரங்களையும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து பத்து குறட்டழிசைகளையும் கொண்டது.அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறுவது.
நூல்
1. சிறந்த பத்து
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை |
கடல் சூழ்ந்தஉலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்துஆசாரமுடைமை.
2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல் |
பிறர் தன்மேற் செய்யும்காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல்.
3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை |
தானாக ஒன்றை மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்கசிறப்புடைத்துத் தான் கற்றதனைக் கடைப்பிடித்திருத்தல்.
4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை |
செல்வத்தினும் மிக்கசிறப்புடைத்து மெய்யுடைமை.
5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை |
இளமையினும் மிக்கசிறப்புடைத்து உடம்பு நோயின்மை.
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று |
அழகுடைமையினும் மிக்கசிறப்புடைத்து நாணுடைமை.
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று |
நல்ல குலமுடைமையினும்கல்வியுடைமை சிறப்புடைத்து.
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று |
தான் ஒன்றைக் கற்குமதனினும்சிறப்புடைத்துக் கற்றாரை வழிபாடு செய்தல்.
9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று |
பகைவரைச் செலுத்தலினும் மிக்கசிறப்புடைத்துத் தன்னைப் பெருகச்செய்தல்.
10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று |
செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின்அழிதலின் நின்ற நிலையிற் சிறுகாமை சிறப்புடைத்து.
2. அறிவுப்பத்து
11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப |
கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப்பிறந்தமையை அவன் ஈரமுடைமையானே அறிவர்.
12. ஈரம் உடைமை ஈகையின் அறிப |
ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக்கொடுக்கும்கொடையினானே அறிவர்.
13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப |
ஒருவன் தப்பாதகடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன்நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர்.
14. கற்றது உடைமை காட்சியின் அறிப |
ஒருவனது கல்வியைஅவன்றன் அறிவினானே அறிவர்.
15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப |
ஒருவன் ஆராய்ந்து துணியவல்லன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானேஅறிவர்.
16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப |
சிறுமையுடைய குடியின்கண் பிறந்தான் என்பதனை அவன் செருக்கினானேஅறிவர்.
17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப |
ஒருவனை ஒருவன்படிறுசெய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர்.
18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப |
சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடையஎல்லாச் சோர்வையும் அறிவர்.
19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப |
ஒருவன் தன்னறிவின்கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுடையன்என்ப தறிவர்.
20. சீருடை யாண்மை செய்கையின் அறிப |
ஒருவன் புகழுடைய ஆண்வினைத்தன்மையை அவன் செய்கையான் அறிவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு, அறிப, சிறந்தன்று, அறிவர், ஒருவன், அவன், உடைமை, பத்து, இலக்கியங்கள், மிக்கசிறப்புடைத்து, காஞ்சி, முதுமொழிக், பதினெண், கீழ்க்கணக்கு, என்பதனை, சிறுகாமை, கற்றாரை, உடைமையின், கள்வனாதல், சிறப்புடைத்து, பிறந்தமை, மிக்கசிறப்புடைத்துத், மக்கட், யுலகத்து, ஆர்கலி, சங்க, கெல்லாம், கடல், மையின், தான், கற்றது, நல்ல