புறநானூறு - 116. குதிரையும் உப்புவண்டியும்!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர் புன் மூசு கவலைய முள் முடை வேலிப், பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், |
5 |
பீரை நாறிய சுரை இவர் மருங்கின், ஈத்திலைக் குப்பை ஏறி உமணர் உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ; நோகோ யானே; தேய்கமா காலை! பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும், |
10 |
கலையுங் கொள்ளா வாகப்,பலவும் காலம் அன்றியும் மரம் பயம் பகரும் யாணர் அறாஅ வியன்மலை அற்றே அண்ணல் நெடுவரை ஏறித், தந்தை பெரிய நறவின், கூர் வேற் பாரியது |
15 |
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த வலம் படுதானை வேந்தர் பொலம் படைக் கலிமா எண்ணு வோரே. |
மகளிர் – சினையில் பூத்த குவளை மலர்களாலான தழையாடையால் ஒப்பனை செய்துகொண்டிருந்தனர். அழகிய கண்கள். சிரித்த முகம். – இது அவர்களின் தோற்றம். பாரியின் அரண்மனை – புல் வளர்ந்திருக்கும் காட்டுப்பாதை. முள் போட்ட வேலி. பஞ்சு வெடித்திருக்கும் முற்றம். ஈச்சம் இலையால் வேயப்பட்ட சிறிய இல்லம். கூரைமீது சுரைக்கொடி ஏறிப் படர்ந்திருக்கும் இல்லம். பண்டைய விளையாட்டு – இப்படிப்பட்ட வீட்டுக் கூரை மேல் ஏறித் தொலைவில் தோன்றும் உப்பு விற்கச் செல்லும் உமணரின் உப்பு-வண்டிகளை ஒன்று, இரண்டு … என்று எண்ணிக்கொண்டு விளையாடினர். பறம்பு மலை – பூஞ்சோலையில் மயில் ஆடும். மலைக்காட்டில் குரங்குகள்கூட உண்ணாமல் துள்ளி விளையாடும் அளவுக்குப் பருவம் அல்லாக் காலத்திலும் மரங்கள் காய்கனிகளை நல்கும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 116. குதிரையும் உப்புவண்டியும்!, இலக்கியங்கள், உப்புவண்டியும், உப்பு, புறநானூறு, குதிரையும், ஏறித், இல்லம், முள், பூத்த, எட்டுத்தொகை, சங்க, மகளிர்