புறநானூறு - 117. தந்தை நாடு!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும், தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், வயல்அகம் நிறையப், புதற்பூ மலர, மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண் ஆமா நெடு நிறை நன்புல் ஆரக், |
5 |
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப், பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே; பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும் ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. |
10 |
பாரி மகளிர் ‘ஆய்தொடி அரிவையர்’. அவர் நாடு இயற்கைச் சீற்றங்கள் தாக்கினாலும் வளம் குன்றாமல் முல்லை பூக்கும் நலம் கொண்டது. அதற்குக் காரணம் அந்நாட்டில் அரசன் ஆட்சி செங்கோலாக அமைந்து சான்றோர் பல்கி வாழ்வதே ஆகும். இயற்கைச் சீற்றங்கள் மைம்மீன் புகைதல் – புகையைக் கக்கிக்கொண்டே எரிமீன் விழுதல். தூமம் தோன்றல் – வால்மீன் தோன்றல் வெள்ளி தென்திசையில் நகர்தல் முல்லை அரும்பல் – காட்டுப்பூனைக் குட்டியின் முள் போன்ற கூர்மையான பற்களைப்போல் முல்லை அரும்புகள் தோன்றல். மழைவளம் – செங்கோல் ஆட்சி, சான்றோர் வாழ்தல் ஆகியனவும் பருவமழை பொய்யாமல் பெய்யக் காரணம் என நம்பப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 117. தந்தை நாடு!, முல்லை, தந்தை, இலக்கியங்கள், நாடு, தோன்றல், சான்றோர், புறநானூறு, சீற்றங்கள், காரணம், ஆட்சி, இயற்கைச், வெள்ளி, எட்டுத்தொகை, சங்க, தூமம், முள்