புறநானூறு - 115. அந்தோ பெரும நீயே!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
சிறப்பு : பறம்பின் வளமை.
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார், வாக்க உக்க தேக் கள் தேறல் கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல், அண்ணல் யானை, வேந்தர்க்கு |
5 |
இன்னான் ஆகிய இனியோன் குன்றே! |
அவன் (பாரி) மூவேந்தர்க்கும் வேண்டாதவன் ஆயினான். மற்றவர்களுக்கெல்லாம் இனியவன் ஆயினான். எப்படி? ஒருபிறம் அவன் குன்றத்தில் ஆர்க்கும் அருவி ஒழுகுகிறது. மற்றொருபுறம் அவன் மற்றவர்களுக்கு ஊற்றித் தரும் இன்சுவைக் கள் ஒழுகுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 115. அந்தோ பெரும நீயே!, இலக்கியங்கள், அந்தோ, அவன், புறநானூறு, பெரும, நீயே, ஆயினான், ஒழுகுகிறது, சங்க, எட்டுத்தொகை, சார், அருவி