பதிற்றுப்பத்து - 65. ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல்
துறை : பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நாள் மகிழ் இருக்கை
எறி பிணம் இடறிய செம் மறுக் குளம்பின் பரியுடை நல் மா விரி உளை சூட்டி, மலைத்த தெவ்வர் மறம் தபக் கடந்த காஞ்சி சான்ற வயவர் பெரும! வில்லோர் மெய்ம்மறை! சேர்ந்தோர் செல்வ! |
5 |
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை, மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின், வேய் புரைபு எழிலிய விளங்கு இறைப் பணைத் தோள், காமர் கடவுளும் ஆளும் கற்பின், சேண் நாறு நறு நுதல், சேயிழை கணவ! |
10 |
பாணர் புரவல! பரிசிலர் வெறுக்கை! பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப! நின் நாள் மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே- தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன் பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு, |
15 |
சேறு செய் மாரியின், அளிக்கும் நின் சாறு படு திருவின் நனை மகிழானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 65. ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல் , இலக்கியங்கள், பதிற்றுப்பத்து, ஓலக்க, சிறப்புக், கூறுதல், வினோதத்தொடு, செல்வச், படுத்து, மன்னவனது, பூண், அணிந்து, இருக்கை, நின், எழிலிய, சங்க, எட்டுத்தொகை, வண்ணம், நாள், மகிழ்