பதிற்றுப்பத்து - 64. மன்னவன் கொடைச் சிறப்பினை வென்றிச் சிறப்பொடு படுத்துக் கூறுதல்
துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : உரைசால் வேள்வி
வலம் படு முரசின் வாய் வாட் கொற்றத்துப் பொலம் பூண் வேந்தர் பலர்தில்; அம்ம! அறம் கரைந்து வயங்கிய நாவின், பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி, அந்தணர் அருங் கலம் ஏற்ப, நீர் பட்டு, |
5 |
இருஞ் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து, களிறு நிலை முணைஇய தார் அருந் தகைப்பின், புறஞ் சிறை வயிரியர்க் காணின், 'வல்லே எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவி, அலங்கும் பாண்டில், இழை அணிந்து ஈம்' என, |
10 |
ஆனாக் கொள்கையை ஆதலின், அவ் வயின் மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட ஞாயிறு தோன்றியாங்கு, மாற்றார் உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி, காண்கு வந்திசின்-கழல் தொடி அண்ணல்! |
15 |
மை படு மலர்க் கழி மலர்ந்த நெய்தல் இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு, உயர்ந்த மழையினும் பெரும் பயம் பொழிதி; அதனால் பசியுடை ஒக்கலை ஒரீஇய இசை மேம் தோன்றல்! நின் பாசறையானே. |
20 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 64. மன்னவன் கொடைச் சிறப்பினை வென்றிச் சிறப்பொடு படுத்துக் கூறுதல் , இலக்கியங்கள், கூறுதல், மன்னவன், படுத்துக், பதிற்றுப்பத்து, சிறப்பொடு, கொடைச், சிறப்பினை, வென்றிச், வேள்வி, நின், உரைசால், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்