பதிற்றுப்பத்து - 34. வென்றிச் சிறப்பு
துறை : தும்பை அரவம்
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : ஒண் பொறிக் கழற் கால்
ஒரூஉப நின்னை-ஒரு பெரு வேந்தே!- ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால், இரு நிலம் தோயும் விரிநூல் அறுவையர்: செவ் உளைய மா ஊர்ந்து, நெடுங் கொடிய தேர் மிசையும், |
5 |
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும், மன் நிலத்து அமைந்த ... ... ... மாறா மைந்தர் மாறு நிலை தேய, முரைசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, |
10 |
அரைசு படக் கடக்கும் ஆற்றல் புரை சால் மைந்த!-நீ ஓம்பல் மாறே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 34. வென்றிச் சிறப்பு, இலக்கியங்கள், வென்றிச், பதிற்றுப்பத்து, சிறப்பு, கழற், கால், பொறிக், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்