பதிற்றுப்பத்து - 30. வென்றிச் சிறப்பு
துறை : பெருஞ்சோற்று நிலை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புகன்ற ஆயம்
இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை, மணிக்கலத்தன்ன மா இதழ் நெய்தல் பாசடைப் பனிக் கழி துழைஇ, புன்னை வால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும் அல்குறு கானல், ஓங்கு மணல் அடைகரை, |
5 |
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல, இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் தண் கடற் படப்பை மென்பாலனவும்; காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர் செங் கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட |
10 |
மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு, பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும் குன்று தலைமணந்த புன் புல வைப்பும்; காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது, அரி கால் அவித்து, பல பூ விழவின்- |
15 |
தேம் பாய் மருதம் முதல் படக் கொன்று, வெண் தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும் பல சூழ் பதப்பர் பரிய, வெள்ளத்துச் சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம் முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும் |
20 |
செழும் பல் வைப்பின்-பழனப் பாலும்; ஏனல் உழவர் வரகுமீது இட்ட கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை, மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும் புன்புலம் தழீஇய, புறவு அணி வைப்பும்; |
25 |
பல் பூஞ் செம்மற் காடு பயம் மாறி, அரக்கத்தன்ன நுண் மணற் கோடு கொண்டு, ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும் விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும்; பிறவும்; பணை கெழு வேந்தரும் வேளிரும், ஒன்று மொழிந்து, |
30 |
கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க, முரண் மிகு கடுங் குரல் விசும்பு அடைபு அதிர, கடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்து அருந் திறல் மரபின் கடவுள் பேணியர், உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறற் பிண்டம் |
35 |
கருங் கட் பேய்மகள் கை புடையூஉ நடுங்க, நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி, எறும்பும் மூசா இறும்பூது மரபின், கருங் கட் காக்கையொடு பருந்து இருந்து ஆர; ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால், |
40 |
பெருஞ் சமம் ததைந்த, செருப் புகல், மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து, பெருஞ் சோறு உகுத்தற்கு, எறியும்- கடுஞ் சின வேந்தே!-நின் தழங்கு குரல் முரசே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 30. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், வென்றிச், பதிற்றுப்பத்து, சிறப்பு, மிகு, நடுங்க, கால், குரல், மரபின், பெருஞ், கருங், வைப்பும், கடுஞ், வெண், துறை, சங்க, எட்டுத்தொகை, வண்ணம், புகன்ற, கோடு, கெழு, ஆயம், கொண்டு