பதிற்றுப்பத்து - 18. கொடைச் சிறப்பு
துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கூந்தல் விறலியர்
உண்மின் கள்ளே! அடுமின் சோறே! எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே! வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப, இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால், ஏந்து கோட்டு அல்குல், முகிழ் நகை, மடவரல், |
5 |
கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே! பெற்றது உதவுமின்; தப்பு இன்று பின்னும்- மன் உயிர் அழிய, யாண்டு பல துளக்கி, மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்ட தண் இயல் எழிலி தலையாது மாறி, |
10 |
மாரி பொய்க்குவது ஆயினும், சேரலாதன் பொய்யலன் நசையே! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 18. கொடைச் சிறப்பு , இலக்கியங்கள், கொடைச், பதிற்றுப்பத்து, சிறப்பு, கூந்தல், விறலியர், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்