நற்றிணை - 68. குறிஞ்சி

'விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது, இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்' என- குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி, பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம், |
5 |
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே; 'செல்க' என விடுநள்மன்கொல்லோ? எல் உமிழ்ந்து, உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள், கொடி நுடங்கு இலங்கின மின்னி, ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே. |
10 |
அவரது சிகரம் உயர்ந்த குன்றம் ஒளியை எங்கும் பரப்பி வலிய இடி முழங்குகின்ற இரவிருளில் நடுயாமத்திலே; கொடி நுடங்கினாற் போன்றிலங்கினவாய் மின்னி இயங்குகின்ற முகில் தங்கி மழையைப் பெய்யாநின்றது; இப்பொழுது இளமங்கையர் தாம் விளையாடுகின்ற தோழியர் கூட்டத்தோடு ஓரையாடாமல் வீட்டில் இற்செறிக்கப்பட்டிருத்தலான அற நெறியன்று அன்றிச் செல்வமுந் தேய்ந்துவிடும்' என்று; விரைந்து சென்று அன்னையை வணங்கிச் சொல்லுபவரை நாம் பெறுவேமாயின், அவ்வன்னை நம்மை நோக்கி நீயிர் செல்வீ¢ராக என்று விடுப்பாளோ ?; அங்ஙனம் விடுப்பின் அவர் மலையிற் பெய்யுமழை குறிய நுரைகளைச் சுமந்து கொண்டு நறிய மலர்களுடனே யாற்றிற் பொங்கி வருகின்ற புதுநீரை உள்ளம் மகிழ யாம் ஆடாநிற்போம்; அங்ஙனம் கூறுவாரைப் பெற்றிலே மாதலால் யாங்கொண்ட அவா வீணே கழிந்தது;
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது. - பிரான் சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 68. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, மின்னி, அவர், அங்ஙனம், கொடி, சுமந்து, எட்டுத்தொகை, சங்க, பொங்கி, வணங்கிச்