நற்றிணை - 149. நெய்தல்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி, மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி, மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற, சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப, அலந்தனென் வாழி- தோழி!- கானல் |
5 |
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் கடு மான் பரிய கதழ் பரி கடைஇ, நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு செலவு அயர்ந்திசினால், யானே; அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே! |
10 |
தோழீ! வாழி! நம்மூர்த் தெருவிலுள்ள மாதர்களுள் ஓரோ வோரிடத்திற் சிற்சிலரும் ஒரோ வோரிடத்திற் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி; வியப்புடையார்போலத் தம்தம் மூக்கினுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றாநிற்கவும்; அப் பழிமொழியை நம் அன்னை கேட்டறிந்து மெய்ம்மையாகுமெனக் கொண்டு சிறிய கோல் ஒன்றனை ஏந்தி அது சுழலும்படி வீசி அடிப்பவும்; இவையிற்றால் யான் மிக்க துன்பமுடையேன் ஆயினேன் காண்; ஆதலின் இத் துன்ப மெல்லாம் தீரும்படி கழியருகின் கண்ணதாகிய சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரிமயிரையுடைய விரைந்து செல்லும் குதிரைபூண்ட நெடிய தேரைச் செலுத்தி, நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு இரவு நடு யாமம் நள்ளிருளில் வருகின்ற இயன்ற தேரையுடைய கொண்கனொடு; நீ செல்லுமாறு யான் உடன்படாநின்றேன் நீ எழுவாயாக!; அங்ஙனம் சென்றொழிந்தால் பேரொலியையுடைய இவ்வூர் யாதுதான் செய்யற்பாலது? வேண்டுமேல் அலர் தூற்றிக் கொண்டு போகக் கடவதாக!;
தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம். - உலோச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 149. நெய்தல், இலக்கியங்கள், கொண்கனொடு, நெய்தல், நற்றிணை, தேர்க், இயல், வரூஉம், வோரிடத்திற், யான், கொண்டு, நாள், அலர், மலர், நோக்கி, சங்க, எட்டுத்தொகை, கோல், அன்னை, தோழி, வாழி, தீண்டிய