குறுந்தொகை - 75. மருதம் - தலைவி கூற்று
(தலைவனது வரவைப் பாணனால் அறிந்த தலைவி, "நீ பாடலிபுத்திர நகரைப் பெறுவாயாக" என்று வாழ்த்தியது.)
நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ ஒன்று தெளிய நசையினம் மொழிமோ வெண்கோட் டியானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. |
5 |
- படுமரத்து மோசிகீரனார். |
பாண! தலைவரது வரவை நீயே நின்கண்ணாற் கண்டாயோ? அன்றித் தலைவனைக் கண்டாரைக் கேட்டறிந்தாயோ? அங்ஙனம் பிறர்பால் கேட்டனையாயின் உண்மையாகிய ஒன்றை அறிய விரும்பினேம்; ஆதலின் சொல் வாயாக; சொன்னால் வெள்ளிய கொம்பையுடைய யானைகள் சோணையாற்றில் துளைந்து விளையாடும் பொன் மிக்க பாடலிபுத்திர நகரத்தை பெறு வாயாக.
முடிபு: காதலர் வரவை நீ கண்டனையோ? கேட்டனையோ? யார்வாய்க் கேட்டனை? நசையினம்; மொழிமோ; பாடலி பெறீஇயர்!
கருத்து: தலைவர் வரவை உரைத்த நினக்குச் செல்வம் பெருகுவதாகுக,
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 75. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, மருதம், வரவை, குறுந்தொகை, கூற்று, கேட்டனை, யார்வாய்க், காதலர், பெறீஇயர், வாயாக, கேட்டனையோ, சங்க, எட்டுத்தொகை, பாடலிபுத்திர, நசையினம், மொழிமோ, பாடலி