குறுந்தொகை - 74. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் தோழிபால் குறியிடத்தெதிர்ப்படுதலை விரும்பினானாக, தலைவியிடம், "நம்மால் விரும்பப்படும் தலைவன் நம்மை விரும்பி மெலிகின்றான்" என்று அவள் கூறியது.)
விட்ட குதிரை விசைப்பி னன்ன விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன் யாம்தற் படர்ந்தமை அறியான் தானும் வேனில் ஆனேறுபோலச் சாயினன் என்பநம் மாணலம் நயந்தே. |
5 |
- விட்டகுதிரையார். |
அவிழ்த்து விடப்பட்ட குதிரை துள்ளியெழும் எழுச்சியைப் போன்ற வளைத்துப் பின் விட்டமையால் வானத்தைத் தோய்ந்த பசிய மூங்கிலையுடைய குன்றத்தையுடைய நாட்டுக்குத் தலைவன் யாம் தன்னை நினைந்து மெலிதலை அறியானாகி தானும். வேனிலின் வெம்மையை ஆற்றாத இடபத்தைப் போல நமது மாட்சிமைப்பட்ட நலத்தை விரும்பி மெலிந்தான்.
முடிபு: நாடன் யாம் தற்படர்ந்தமையை அறியானாகி நம் நலம் நயந்து சாயினன்.
கருத்து: தலைவன் கருத்துக்கு உடம்பட வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 74. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தலைவன், கூற்று, குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, சாயினன், யாம், அறியானாகி, தானும், விரும்பி, எட்டுத்தொகை, சங்க, குதிரை, நாடன்