குறுந்தொகை - 70. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று நீங்கும் தலைவன், "இவள் ஐம்புலனுக்கும் இன்பத்தைத் தருபவளாயினாள்; இவளைப் புகழுமாற்றியேன்" என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறி மகிழ்ந்தது.)
ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள் நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே இனையள் என்றவட் புனையள வறியேன் சிலமெல் லியவே கிளவி அணைமெல் லியள்யான் முயங்குங் காலே. |
5 |
- ஓரம்போகியார். |
நெஞ்சே! ஒடுங்கிய நெய்ப்பையுடைய கூந்தலையும் ஒள்ளிய நுதலையும் உடைய தலைவி மணத்தையும் தண்மையையும் உடைய தன்மையினள்; ஆயினும் பிரிந்தகாலத்துப் பொறுத்தற்கரிய வருத்தத்தைத் தருபவள்; அவளை இத்தகையினளென்று அவளுடைய சொற்கள் சின்மையையுடையன; மென்மையை உடையன; யான் அவளை அணையும்பொழுது பஞ்சணையைப் போன்ற மென்மையை உடையவள்.
முடிபு: குறுமகள் நறுந்தண்ணீரள்; அணங்கினள்; புனையளவு அறியேன்; கிளவி சில மெல்லிய; அணையுங்கால் அணை மெல்லியள்.
கருத்து: இவள் ஐம்புலனுக்கும் இன்பந்தருபவள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 70. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, உடைய, அவளை, மென்மையை, கிளவி, இவள், எட்டுத்தொகை, சங்க, ஐம்புலனுக்கும், குறுமகள்